என் மலர்
கடலூர்
- பண்ருட்டி அருகே சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், ஊராட்சி செயலாளர் ஜோதிநாதன்,உக்கரமூர்த்தி, ராமநாதன், திருநாவுக்கரசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
நெய்வேலி சட்ட மன்ற தொகுதி, பண்ருட்டி அருகே கருக்கை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இட பற்றாக்குறை உள்ளதால் புதிய வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாணவ மாணவிகளுக்கு உதவுகின்ற வகையில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியில் ரூபாய் 15 லட்சம் பெற்று, 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட பட்டு, திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக திரு சபா.ராேஜந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சபா. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், வட்டார கல்வி அலுவலர் செல்வம்,பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் கலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், ஊராட்சி செயலாளர் ஜோதிநாதன்,உக்கரமூர்த்தி, ராமநாதன், திருநாவுக்கரசு, வெங்கடேசன், சேட்டு, ராஜிவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கவிதாஞானசேகரன், ஒன்றிய விவசாய அணி செந்தாமரை, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், தொமுச பேரவை துணை தலைவர் வீரராமச்சந்திரன், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய மேலாளர் பாண்டியன், ஒன்றிய துணைச் செயலர்கள் செல்வகுமார், ஏழுமலை, மற்றும் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் வெங்கடேசன், மாணவரணி இளங்கோ, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி, ஒப்பந்ததாரர் நித்தியநந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் 1000 பேருக்கு இலவச பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது.
பண்ருட்டி
பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் ஜமாபந்தி திருவிழா நேற்றுதொடங்கி 21ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சமாபந்தி திருவிழாவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராம நிர்வாக அதிகாரிகள் கூட்டம் தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது. இதில் துணை தாசில்தார்கள் சிவா சேகர் கிருஷ்ணா மற்றும் அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தாசில்தார் சிவகார்த்திகேயன் பேசும்போது கூறியதாவது:ஜமாபந்தி நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி ஜமாபந்தி நிறைவு விழா விரைவில் நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் 1000 பேருக்குஇலவச மனைபட்டா வழங்கப்பட உள்ளது ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரிகளும் தங்களது கிராமத்தில் உள்ள வீடு மனை இல்லாத ஏழை எளிய யோருக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
- விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.
கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது.
இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- ஏற்கனவே கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று உத்தரவிட்ட நாளிலிருந்து கோவிலில் போலீசார் தினமும் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு உத்தரவுபடி பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பக்தர்கள் பாடலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.
இதற்கான கடிதத்தையும் இந்து சமய அறநிலையத்துறை கோவில் தீட்சிதர்களுக்கு அனுப்பியிருந்தது. அந்த கடிதத்தில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக புகார்கள் வந்தது. அதனால் தேவாரம், திருவாசகம் பாட வருபவர்களுக்கு அரசாணையின்படி அனுமதி அளிக்க வேண்டும். பாட செல்பவர்களும் முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துவிட்டு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் பாட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதையொட்டி சிதம்பரம் நடராஜர்கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று உத்தரவிட்ட நாளிலிருந்து கோவிலில் போலீசார் தினமும் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கடிதத்தால் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் நடராஜர்கோவிலில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட சிவ பக்தர்கள் மற்றும் பக்தர்கள் முடிவுசெய்தனர். அதன்படி நேற்று காலைமுதல் பக்தர்கள் கீழ் சன்னதி வழியாக நடராஜர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சிவபக்தர்கள் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி மனதுருக தேவாரம், திருவாசகம் பாடி சாமி தரிசனம் செய்தனர்.
என்றாலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மாவட்ட போலீஸ் கூடுத போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் டி,எஸ். பி.க்கள் சிதம்பரம் ரமேஷ் ராஜ், சேத்தியாத்தோப்பு சுந்தரம் ஆகியோர் தலைமையில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி கோவிலின் கனகசபை பகுதி, உள் பிரகாரம், வெளி பிரகாரம், நுழைவுவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கடலூர் மாவட்டத்தில் சுதந்திரதின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம் அறிவித்துள்ளார்.
- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கையில் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறையில் பணிபுரிந்து மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவை நிறுவனங்களுக்கும் ரொக்க பரிசு, தங்கபதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.இவ்விருது பெற தகுதியுடைய விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் 30- ந்தேதி க்குள் விண்ணப்பித்து அதன் நகலை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, செம்மண்டலம், கடலூர் என்ற விலாசத்தில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- கொள்ளையடிப்பதை தடுத்ததால் ஆத்திரம்: தனியார் தொழிற்சாலை குடோனுக்கு மர்ம கும்பல் தீ வைத்தனர்.
- தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் அருகே சிப்காட் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணிகளை தொடங்கியது. இதனை தொடர்ந்து பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில் தானே புயல் காரணமாக அந்த தொழிற்சாலை கடும் சேதம் ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பாதிப்படைந்தது.அதன் பிறகு தொழிற்சாலையை தொடர முடியாத காரணத்தினால் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலை பணிகளை கைவிட்டது. ஆனால் சுமார் கோ1,000டி ரூபாய் மதிப்பிலான தளவாட சாமான்கள் தொழிற்சாலைக்குள் இருந்தது.
இந்த தொழிற்சாலை 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அங்கு இருக்கும் தளவாட பொருட்கள் சமீபகாலமாக இரவு பகல் பாராமல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வந்தனர். இதனை அறிந்த போலீசார் தடுக்கச் சென்ற போது அவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றது.
கடந்த வாரம் தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு போலீசாரால் உரிய பாதுகாப்பு கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் தொழிற்சாலை நிர்வாகம் அதிலுள்ள முக்கிய தளவாட சாமான்கள் ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பதற்கு அறிவுறுத்தப் பட்டது.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக தொழிற்சாலையில் உள்ள முக்கிய தளவாட பொருட்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி நடைபெற்று வந்தது. இருந்தாலும் தொழிற்சாலையின் அதிமுக்கிய பொருட்கள் அடங்கிய குடோனுக்கு2 பக்கமும் கண்டெய்னர் வைத்து பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சமூகவிரோதிகள் இன்று அதிகாலை தொழிற்சாலைக்குள் அந்த முக்கிய குடோனுக்கு தீ வைத்தனர். இதனால் தீ பற்றி முழுவதுமாக எரியத் தொங்கியது. கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் குடோனில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
இந்த தொழிற்சாலை 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய எண்ணை சுத்திரிகரிப்பு நிலையம் "ஹால்தியா" என்ற நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் இந்தப் பகுதியில் இந்த தொழிற்சாலை வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு ஒன்றுதிரண்டு வந்தனர்.
- எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்
கடலூர்:
கடலூர் அருகே செல்லங்குப்பம் பகுதியில் நேற்று நள்ளிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு பணிகள் மேற்கொண்டு வந்தனர். தகவல் அறிந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு சிமெண்ட் கட்டை மற்றும் இரும்பு பைப் அமைக்கும் பணி நடைபெற்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைக்க வேண்டுமானால் வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் உரிய முறையில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் அமைத்தால் அதனை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டுமின்றி ஏற்கனவே இந்த பகுதியில் கொடிக்கம்பம் உள்ள நிலையில் எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்.
அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பம் உடனடியாக அங்கிருந்து அகற்றி அவர்கள் கொண்டு சென்றனர் . இனி வருங்காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- சேத்தியாத்தோப்பு பூதங்குடி - எஸ்.டி.சீயோன். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்
- சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கேக் வெட்டி பாராட்டினார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பூதங்குடி எஸ்.டி.சீயோன். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேக் வெட்டி பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகி சுஜியின் தலைமை தாங்கினார் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆண்டனி வரவேற்பு நிகழ்ச்சியில் பிளஸ்- 2 தேர்வில் முதலிடம் பெற்ற இளம்பாரதி 587 மதிப்பெண்ணும்2-வது இடம்பெற்ற மாணவிகள் அனுஷியா .அஸ்வினி 578 மதிப்பெண்களும், 3-வது இடம் பிடித்த கிருத்திகா 575 மதிப்பெண்களும் பெற்றனர்.
அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் நர்மதா 481 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், சாருமதி 477 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும் கதிர்நிலவன் 467 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கேக் வெட்டி பாராட்டினார்.
இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்விற்கு 99.75 சதவீதம் . வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்100-க்கு 100 பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் லட்சுமி சோரடியா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
- 3 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் எஸ்.எஸ்.ஆர். நகரில் இயங்கி வரும் லட்சுமி சோரடியா பள்ளியில் கடந்த கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது பள்ளியின் 100 சதவீத தேர்ச்சியாகும். மாணவி சுவாதி 600-க்கு 588 மதிப்பெண்களும், மாணவி அபிநயா 578 மதிப்பெண்களும், மாணவர் ராகுல் 575 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
24 மாணவர்கள் தலா 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். மாணவர்கள் 7 பேர் பல்வேறு பாடங்களில் தலா 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தேவசேனா 500-க்கு 486 மதிப்பெண்களும், மாணவி சபிதா 481 மதிப்பெண்களும், சுகாசினி 473 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் தலா 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். 3 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளையும், அதிக மதிப்பெண்கள் பெற கடுமையாக உழைத்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் டி.மாவீர்மல் சோரடியா, பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா ஆகியோா் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள்.
- பிளஸ்-2 தேர்வில் பண்ருட்டி ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- யோகஸ்ரீ என்ற மாணவி வணிகவியல், பொருளியல், கணினிபயன்பாடு ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
நடந்து முடிந்த பிளஸ்- 2 தேர்வில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி+2பொதுதேர்வில்தேர்வு எழுதிய 402 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100சதவீததேர்ச்சிபெற்றுசாதனைபடைத்துள்ளது. மாணவன்அருண் கார்த்திக், மாணவி தர்ஷனாஆகிய இருவரும் 591 மதிப்பெண்கள்பெற்று முதலிடம் பிடித்தனர். 570க்கு மேல் 14 மாணவ-மாணவியர்களும் 550க்குமேல் 29 மாணவ- மாணவியர்களும், 500க்கு மேல் 92 மாவை, மாணவியர்களும்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
25 மாணவ மாணவிகள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்துள்ளனர். மாணவன்ஹரிஹரன் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகியமூன்று பாடங்களிலும், யோகஸ்ரீ என்ற மாணவி வணிகவியல், பொருளியல், கணினிபயன்பாடு ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் வீரதாஸ், பள்ளி முதல்வர் வாலண்டினா லெஸ்லி, தலைமை யாசிரியர் மணிகண்டன், ஆசிரியர்கள் பாராட்டி பரிசு ழங்கினர்.
- திட்டக்குடியில் முகமூடி அணிந்து பட்டாக்கத்தியுடன் மர்ம நபர்கள் திரிந்ததால் பரபரப்பு
- திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவில் 2 மணி அளவில் திட்டக்குடி விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவில் 2 மர்ம நபர்கள் பூட்டை உடைத்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கடையை உடைப்பதை பார்த்து விட்டு யார் என ஒரு சத்தம் போட்டுள்ளார். உடனே மர்ம நபர்கள் பட்டா கத்தியுடன் அவரைத்துரத்தியதால் அவர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார் மேலும் அவர்கள் இருவரும் மங்கி குல்லா அணிந்து உள்ளனர் மேலும் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து உடனடியாக திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நள்ளிரவு முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: கருத்து கேட்பு முகாமில் குவிந்த 6,628 மனுக்கள்
- கோவில் எங்களுக்கே சொந்தம் என பிச்சாவரம் ஜமீன் பேட்டி
கடலூர் மாவட்டம் சிதம் பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வருகிறார்கள். இந்த கோவில் வரவு, செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்று தீட்சிதர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை அதி காரிகள் நோட்டீஸ் வழங்கி னர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய ஒத்துழைப்பு வழங்க வில்லை.
இந்த நிலையில் நடராஜர் கோவில் விசாரணை தொடர்பாக பொதுமக்கள் கோவில் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆலோசனை மற்றும் கருத்து களை கடலூர் புதுபாளை யத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்தது.
அதன்படி கடலூரில் 2 நாட்களாக பொதுமக்கள், தன்னார்வலர்கள், தமிழ் அமைப்புகள், பல்வேறு அமைப்பு கள் என மின்னஞ்சல் மூலமும், நேரடி யாகவும் மனு கொடுத்தனர். 2 நாட்களில் 6,628 மனுக்கள் பெறப்பட்டது.
இந்தமனுக்கள் கோவி லுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வந்துள்ளது. இந்த மனுக்கள் ஆய்வு செய்து 1 வாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை ஆணை யரிடம் அறிக்கை சமர்ப்பிக் கப்பட உள்ளது என அதி காரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று பிச்சா வரம் ஜமீன்தாரும், சோழமன்னர் வம்சாவழியு மான பாளை யக்காரர் ராஜா சூரப்ப சோழ கனார் மனு அளித்தார். மேலும் அவர் நிருபர்க ளிடம் கூறறியதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவில் பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்கள் கட்டுப் பாட்டில் தான் இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்களிட மிருந்து அபகரிக்கப்பட்டது.
நடராஜர் கோவில் பஞ்சாட சரப்படி அமர வைத்து பட்டாபிசேகமும், முடிசூட்டுவிழாவும், சோழ மன்னர் பரம்பரையினரான எங்களுக்கு செய்யப்படுவது வழக்கத்திலும், நடை முறையிலும் உள்ளது. இந்த கோவில் எங்களுடையது என்பதற்கு இந்த ஆதாரமே போதுமானது.
ஆனால் தீட்சிதர்கள் தற்போது கோவிலின் மான்பை கொச்சைபடுத்தும் வகையில் நடந்து வருகி றார்கள். அவர்களுக்கு கோவிலில் உரிமை உள்ள தாக எந்தவித ஆதரமும் இல்லை. எனவே தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் சித–ம்பரம் நடராஜர் கோவிலில் கனசபை ஏறி பக்தர்கள் திருவாசகம், தேவாரம் பாட அனுமதி அளித்து இந்துசமய அறநிலை–யத்துறை உத்தர விட்டுள்ளது. இதனை கோவில் நிர்வாகம் மறுக்க கூடாது. என்றும் தெரிவிக் கப்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






