search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

    • சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • ஏற்கனவே கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று உத்தரவிட்ட நாளிலிருந்து கோவிலில் போலீசார் தினமும் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு உத்தரவுபடி பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பக்தர்கள் பாடலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.

    இதற்கான கடிதத்தையும் இந்து சமய அறநிலையத்துறை கோவில் தீட்சிதர்களுக்கு அனுப்பியிருந்தது. அந்த கடிதத்தில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக புகார்கள் வந்தது. அதனால் தேவாரம், திருவாசகம் பாட வருபவர்களுக்கு அரசாணையின்படி அனுமதி அளிக்க வேண்டும். பாட செல்பவர்களும் முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துவிட்டு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் பாட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இதையொட்டி சிதம்பரம் நடராஜர்கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று உத்தரவிட்ட நாளிலிருந்து கோவிலில் போலீசார் தினமும் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கடிதத்தால் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் நடராஜர்கோவிலில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட சிவ பக்தர்கள் மற்றும் பக்தர்கள் முடிவுசெய்தனர். அதன்படி நேற்று காலைமுதல் பக்தர்கள் கீழ் சன்னதி வழியாக நடராஜர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சிவபக்தர்கள் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி மனதுருக தேவாரம், திருவாசகம் பாடி சாமி தரிசனம் செய்தனர்.

    என்றாலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மாவட்ட போலீஸ் கூடுத போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் டி,எஸ். பி.க்கள் சிதம்பரம் ரமேஷ் ராஜ், சேத்தியாத்தோப்பு சுந்தரம் ஆகியோர் தலைமையில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவிலின் கனகசபை பகுதி, உள் பிரகாரம், வெளி பிரகாரம், நுழைவுவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×