search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100% pass"

    • 236 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
    • சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான அழகன் என்ற கண்ணன் பாராட்டினர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 236 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

    மேலும் 228 மாணவ-மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி மீனலோசினி 600-க்கு 584 மதிப்பெண்களையும், வர்ஷா 577 மதிப்பெண்களையும், மாணவி ஜோதி காருண்யா, மாணவர் மது காண்டீபன் ஆகியோர் 573 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.

    கணிதத்தில் 2 பேரும், இயற்பியலில் 2 பேரும், வேதியியலில் 3 பேரும், உயிரியலில் 2 பேரும், கணிப்பொறி அறிவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

    தேர்ச்சி மற்றும் சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான அழகன் என்ற கண்ணன் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை கல்வி மாவட்டத்தில் உள்ள தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று 2021-22-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 31 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். இதனால் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

    இதனையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

    இதோபோல் கவுந்தப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் பொதுத்தேர்வை 221 மாணவிகள் எழுதினர். இதில் 219 மாணவிகள் தேர்ச்சி பெற்று 99 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளியில் 600-க்கு 584 மதிப்பெண் ஒரு மாணவி பெற்றுள்ளார். 500-க்கும் மேல் 44 மாணவிகள் பெற்று ள்ளனர். வணிகவியல் பாடத்தில் 2 பேரும், கணினி தொழில் நுட்பத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 2 பேரும், கணக்குபதிவியல் 2 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 200 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 192 பேர் தேர்ச்சி பெற்று 96 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 196 மாணவர்கள் எழுதினர். இதில் 189 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 160 மாணவர்கள் எழுதினர். இதில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

    • சேத்தியாத்தோப்பு பூதங்குடி - எஸ்.டி.சீயோன். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்
    • சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கேக் வெட்டி பாராட்டினார்.

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பூதங்குடி எஸ்.டி.சீயோன். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேக் வெட்டி பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகி சுஜியின் தலைமை தாங்கினார் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆண்டனி வரவேற்பு நிகழ்ச்சியில் பிளஸ்- 2 தேர்வில் முதலிடம் பெற்ற இளம்பாரதி 587 மதிப்பெண்ணும்2-வது இடம்பெற்ற மாணவிகள் அனுஷியா .அஸ்வினி 578 மதிப்பெண்களும், 3-வது இடம் பிடித்த கிருத்திகா 575 மதிப்பெண்களும் பெற்றனர்.

    அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் நர்மதா 481 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், சாருமதி 477 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும் கதிர்நிலவன் 467 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கேக் வெட்டி பாராட்டினார்.

    இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்விற்கு 99.75 சதவீதம் . வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்100-க்கு 100 பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் லட்சுமி சோரடியா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • 3 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் எஸ்.எஸ்.ஆர். நகரில் இயங்கி வரும் லட்சுமி சோரடியா பள்ளியில் கடந்த கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது பள்ளியின் 100 சதவீத தேர்ச்சியாகும். மாணவி சுவாதி 600-க்கு 588 மதிப்பெண்களும், மாணவி அபிநயா 578 மதிப்பெண்களும், மாணவர் ராகுல் 575 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    24 மாணவர்கள் தலா 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். மாணவர்கள் 7 பேர் பல்வேறு பாடங்களில் தலா 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தேவசேனா 500-க்கு 486 மதிப்பெண்களும், மாணவி சபிதா 481 மதிப்பெண்களும், சுகாசினி 473 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் தலா 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். 3 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளையும், அதிக மதிப்பெண்கள் பெற கடுமையாக உழைத்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் டி.மாவீர்மல் சோரடியா, பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா ஆகியோா் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #SSLCResult #TNResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது. தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படுகிறது.

    இந்த ஆண்டு பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 10,01,140. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 9,50,397. மாணவியரின் எண்ணிக்கை  4,76,057. மாணவர்களின் எண்ணிக்கை 4,74,340.

    ஒட்டுமொத்தத்தில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 92.5 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 3.9 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12336. இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7083. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5253. மொத்தம் 5584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 5456 அரசுப் பள்ளிகளில் 1687 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #SSLCResult #TNResult

    ×