என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோப்புப்பாளையம்"

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை கல்வி மாவட்டத்தில் உள்ள தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று 2021-22-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 31 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். இதனால் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

    இதனையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

    இதோபோல் கவுந்தப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் பொதுத்தேர்வை 221 மாணவிகள் எழுதினர். இதில் 219 மாணவிகள் தேர்ச்சி பெற்று 99 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளியில் 600-க்கு 584 மதிப்பெண் ஒரு மாணவி பெற்றுள்ளார். 500-க்கும் மேல் 44 மாணவிகள் பெற்று ள்ளனர். வணிகவியல் பாடத்தில் 2 பேரும், கணினி தொழில் நுட்பத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 2 பேரும், கணக்குபதிவியல் 2 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 200 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 192 பேர் தேர்ச்சி பெற்று 96 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 196 மாணவர்கள் எழுதினர். இதில் 189 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 160 மாணவர்கள் எழுதினர். இதில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

    ×