search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே ஜமாபந்தி நிறைவு நாளில் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  வழங்கினார்.
    X

    கருங்குழி ஊராட்சியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.

    கடலூர் அருகே ஜமாபந்தி நிறைவு நாளில் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

    • கடலூர் அருகே ஜமாபந்தி நிறைவு நாளில் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
    • விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும் வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி கருங்கூழி ஊராட்சியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திருமுட்டம் ஆகிய வட்டங்களில் வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டது.

    இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன், முன்னிலை வகித்தார்அதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் கால்நடைபராமரிப்பு துறையின் மூலம் கிராமப்புற பெண்களின் தொழில் முணைவோர் திட்டத்தின் கீழ் வெள்ளாடுகள், செம்மறியாடுகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது மக்கள் நலன் கருதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் என்னற்ற திட்டங்களை செய்யப்படுத்தி வருகிறார்.

    வருவாய் தீர்வாய நிறைவு விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும், 75 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், 10 பயனாளிகளுக்கு பாரத பிரதமர் அவர்களின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணையினையும், 25 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை மற்றும் 41 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும் ஆக மொத்தம் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசு பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக 3774 பணிகள் ரூ.85.45 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசாக திகழ்ந்து வருகிறது.

    கிராமப்புற ஏழை பெண்களுக்கு வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கி தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 2.67 கோடி மதிப்பீட்டில் ஏழ்மை நிலையில் இருக்கும் விதவை பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1400 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவருக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த 46 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக பெண்களுக்கு தொடர் வருமானம் ஈட்டித்தரும் வகையில் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இத்திட்டங்களை கிராமப்புற பெண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய கேட்டுக்கொண்டார்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பரமேஸ்வரி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) குபேந்திரன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×