என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல் வேகம்"

    • சிதம்பரத்தில் துணிகரம்: நகை வாங்குவது போல் நடித்து நகை கடையில் 5 பவுன் கொள்ளை அடித்து சென்றனா்.
    • நகையை எடுப்பதுபோல் நடித்து நகையை திருடிக் கொண்டு ஓடிய வாலி பரை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் ராஜா என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. இந்த கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் மோட்டார் சைக்கிளின் என்ஜினை அணைக்காமல் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று செயினை பார்த்துள்ளார்.

    பின்னர் நகையை எடுப்பதுபோல் நடித்து திடீரென கடையில் இருந்த சுமார் 5பவுன் தங்க செயினை எடுத்துக்கொண்டு ஓடி மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் ஏறி தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் நகர போலீசார்அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படை யில் நகையை எடுப்பதுபோல் நடித்து நகையை திருடிக் கொண்டு ஓடிய வாலி பரை தேடி வருகின்றனர்

    ×