கடலூரில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள்

கடலூரில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் சிட்டிபாபு, செல்வராஜ், சகாயசெல்வன், தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் அமீர்ஜான், நெடுஞ்செழியன், அப்துல் கனி முன்னிலை வகித்தனர்.
கடலூரில் மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கினார்
கடலூரில் மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கினார்
Published on

கடலூர்:

சென்னையில் பெண்கள் அணியும், திருச்சியில் ஆண்கள் அணியும் பங்கேற்கும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட மாணவ, மாணவியர் அணிக்கு அண்ணா விளையாட்டரங்கில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார்.

இணை செயலாளர்கள் சிட்டிபாபு, செல்வராஜ், சகாயசெல்வன், தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் அமீர்ஜான், நெடுஞ்செழியன், அப்துல் கனி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கினார். சுப்புராயன், காசி, தயாளன், பயிற்சியாளர்கள் கோவிந்தராஜன், மோகன சந்தர், செங்குட்டுவன், வினோத்குமார், சதீஷ், தமிழிசை மற்றும் முத்து கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சியாளர் பாலாஜி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com