என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் சார்பாக டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடிக்கான விவசாய கருத்தரங்குகள் நடந்தது
கொரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டெல்டா மாவட்டங்களில் விவசாய கருத்தரங்கு
- கொரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டெல்டா மாவட்டங்களில் விவசாய கருத்தரங்கு நடந்தது.
- நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன் நெல்லின் பூச்சி மற்றும் நோயின் அறிகுறிகள் மற்றும் அவற்றின் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கினார்.
கடலூர்:
நெல்லிற்கான குறுவை பருவம் தொடங்கிய திலிறுந்து கொரமண்டல் உர நிறுவனம் பல்வேறு விவசாய கருத்தரங்கு கூட்டத்தினை டெல்டா மாவட்டங்களில் நடத்தியது.
அதன் அடிப்படையில் கொரமண்டல் உர நிறு வனமும் சிருகமணி மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்துடனும் சேர்ந்து டெல்டா மாவட்டங்களில் பல்வேறு கிராமத்தில் கடந்த 7-ந் தேதி லால்குடி, 9-ந் தேதி நீடாமங்கலம், 13-ந் தேதி சலிப்பேரி மற்றும் 15-ந் தேதி திருவாருர் போன்ற ஊர்களில்) விவசாய கருத்தரங்கு கூட்டத்தினை நடத்தியுள்ளது.
இக்கூட்டனங்களில் கொரமண்டல் உர நிறு வனத்தின் முதுநிலை உழவியல் நிபுணர் குருசாமி தொடக்க உரையாற்றினார், கொரமண்டல் உர நிறு வனத்தின் விவசாயிகளுக் கான சேவைகள் மற்றும் நிறுவனத்தின் வரலாற்றினை பற்றி விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.
வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் தமிழ்செல்வன் மற்றும் பண்ணை மேலாளர் நக்கீரன், நிலம் மற்றும் பருவத்திர்க்கேற்ப நெல்லின் ரகத்தை தேர்ந்தெடுப்பதை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். லால்குடி வேளாண்மை துணை இயக்குனர் சுகுமார் கலை ஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பம் சங்களை பற்றி விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன் நெல்லின் பூச்சி மற்றும் நோயின் அறிகுறிகள் மற்றும் அவற்றின் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கினார்.
கொரமண்டல் உர நிறுவனத்தின் தஞ்சாவூர் விற்பனை அதிகாரி திருப்பதி சீனிவாசன் மற்றும் திருச்சி விற்பனை அதிகாரி ரஞ்சித் கண்ணன் இருவரும் இணைந்து கொரமண்டல் உர நிறுவனத்தின் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான உரங்களை (16:20:00:13, 20:20:00:13, 28:28:00, இன்ஸ்டா, கேரிச், சல்பாமேக்ஸ்) பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர்.
கொரமண்டல் உர நிறு வனத்தின் இளைநிலை உழவியல் நிபுணர் முனைவர் மணிவண்ணன் கொர மண்டல் உர நிறுவனத்தின் விவாயிகளுக்கான இலவச மண் பரிசோதனை பற்றியும் நேரடியாக மண்ணின் கர்மச்சத்தை பரிசோதனை செய்து மண்ணின் வளதிர்க்கேற்ப பயிர்களுக்கு உரம் இடுவதை பற்றி எடுத்துரைத்தார். கொரமண்டல் உர நிறு வனத்தின் திருவாரூர் விற்பனை அதிகாரி சுதாகர் நன்றியுரை ஆற்றினார். கொரமண்டல் உர நிறு வனத்தின் களபணியாளர் ஷண்முகம் உடனிருந்தார்.






