என் மலர்tooltip icon

    கடலூர்

    • பண்ருட்டி பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் 3 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்பிலான காமிரா மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அருகில் இருந்த ரவி என்பவரது மருந்து கடையிலிருந்து பூட்டை உடைத்து மருந்துகளை திருடி சென்றனர். இதுதவிர தாமோதரன் மெட்டல் கடையை பூட்டு உடைத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்று உள்ளனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்தபோது, மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் 3 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடி சென்றனர். பின்னர் அங்கு செட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

    இதுகுறித்து டெல்டா பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.மலையனூர் சேர்ந்த ஆறுமுகம் (வயது 28) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், மேலும் ஒரு நபர் இவருடன் இணைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமின்றி மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்திற்கு ஈடுபடுவதற்காக அங்குசெட்டிபாளையம் பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு பண்ருட்டி பகுதிக்கு வந்து உள்ளனர். பின்னர் 3 கடைகளில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி மீண்டும் மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு சென்றது தெரியவந்துள்ளது. அதன் பிறகு தாங்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பி சென்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த நிலையில் ஆறுமுகம் மீது ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் மற்றொரு மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார்.
    • பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வாணியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிதம்பரத்தில் தனியார் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று மாலை வெங்க டேசன் ஊருக்கு திரும்பி னார். அப்போது பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • வாலிபர் ஒருவர் சங்கீதாவிடம் நைசாக பேச்சுகொடுத்து கவனத்தை திசைதிருப்பினார்.
    • சங்கீதா கையில் இருந்த பையை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சல்போட்டார். உஷாரான வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருப்பனந் தாழ்வார் தெருவை சேர்ந்த–வர் செங்குட்டுவன். அவரது மனைவி சங்கீதா (வயது 33). இவர் நேற்று இரவு சிதம்பரம் வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சங்கீதா–விடம் நைசாக பேச்சு–கொடுத்து கவனத்தை திசை–திருப்பினார். உடனே அந்த வாலிபர் சங்கீதா கையில் இருந்த பையை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சல்போட்டார். உஷாரான வாலிபர் அங்கி–ருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் சங்கீதா புகார் செய்தார். கை பையில் 2 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம், ஏலச்சீட்டுக்கு உரிய ரசீது–கள் இருந்ததாக தெரிவித்தார். போலீசார் வழக்கு––பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    • விருத்தாசலம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    • தப்பியோடிய புலியூர் டிரைவர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் கோ.பூவனுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. டிரைவர் தப்பியோடினார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை, பறிமுதல் செய்தனர். தப்பியோடிய புலியூர் டிரைவர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

    • பெண்ணை மானபங்கம் படுத்திய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    • கொலை மிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    புவனகிரி, கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அன்பரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முன் விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமரசம் செய்தனர். அன்று இரவு அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற அன்பரசன், ஆபாசமாக திட்டி, அவரை மானபங்கம் படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, அன்பரசனை தேடி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
    • கஞ்சா , குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கடலுார் மாவட்டத்தில் கஞ்சா , குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்கும் பொருட்டு உட்கோட்ட காவல் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுரையின்பேரில் கடலூர் மஞ்சக்குப்பம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி, சங்கொலிக்குப்பம் கிராமம் ,சான்றோர்பாளையம், ராசாபேட்டை சுனாமி நகர் , சிதம்பரம் பெரியகுப்பம் கிராமம், கிள்ளை மீனவர் காலனி, விருத்தாச்சலம் புதூர், நெய்வேலி சேப்ளா நத்தம் கிராமம், பண்ருட்டி புறங்கனி கிராமம் , காட்டுகூடலூர் , சேத்தியாதோப்பு செல்லிவிழி கிராமம் , இனமங்கலம் , காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் , திட்டக்குடி பேருந்து நிறுத்தம், நல்லூர் , சிறுபாக்கம் ஆண்டவர் கோவில் ஆகிய போலீஸ் நிலையத்தில் போலீசார்கள் போதை தடு ப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார்கள்.கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு , பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் தடைப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , கஞ்சா , குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பண்ருட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் வேலைக்கு ஏதும் சொல்லாமல் வீட்டிலிருந்து வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தட்டான் சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் வேலைக்கு ஏதும் சொல்லாமல் வீட்டிலிருந்து வந்தார். சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த ராஜசேகரன் வீட்டில் இருந்த விஷம் குடித்து மயங்கி ய நிலையில் கிடந்தார். பின்னர் இது குறித்து அறிந்த வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜசேகரன் இறந்தார். இது குறித்து பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பண்ருட்டி அருகே ஊர்வலத்தில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • அதே ஊரை சேர்ந்த வினோத், மலையப்பன், குப்பன் ஆகியோர் சாவு .

    கடலூர்:

    கடலூர் செல்லங்கு ப்பத்தை சேர்ந்த பிரசாந்த (24)., இவர் கடந்த 8ம் தேதிதனது பாட்டி இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் வந்தார். கோட்டலாம்பாக்கம் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் அதே ஊரை சேர்ந்த வினோத், மலையப்பன், குப்பன் ஆகியோர் சாவு ஊர்வலத்தில் மதுகுடித்து ஆட்டம் போட்டுள்ளனர். அவர்களிடம் ஏன் இப்படிகுடித்து விட்டுபிரச்சனை செய்கிறீர்கள் என்று பிரசாந்த் கேட்டுள்ளார்இதனால் ஆத்திரமடைந்த மூவரும் பிரசாந்தை அசிங்கமாக திட்டிதாக்கிகொலைமிரட்டல்விடுத்தனர். காயமடைந்த பிரசாந்த் கடலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்கள். 

    • பண்ருட்டியில் பெண் மருத்துவ ஊழியர் மாயமானார்.
    • சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மேட்டா மேடு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். அவரது மகள் சந்தியா (வயது 24) இவர் எம்.எஸ்.சி. முடித்துவிட்டு புதுவை மதகடிப்பட்டு உள்ள மணக்குள விநாயகர் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடந்த 8- தேதி வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் பல்வேறு இடங்களில் இவரை தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லை. இது குறித்து சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சந்தியா என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவசர காலங்களில் 108 ஆம்பு லன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழனியாண்டவர் நகர்உள்ளது. இந்த நகரில் அரசு அதி காரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பழனி ஆண்டவர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதி சரிவர இல்லாமல் குண்டும் குழியுமாக பொது மக்களின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்த முடியாத அள வில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மோட்டார் சைக்கில் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்படைகின்றனர். மேலும் இந்த பஞ்சரான சாலையினால் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் சரிவர பராமரிக்கவில்லை இத னால் மழைக்காலங்களில் மழை நீர் கழிவுநீர் கால்வாயில் தேங்கி சாலையில் பெருக் கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த கழிவுநீரில் தேங்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ளவர் களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்கள் கால்வாயில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அந்த பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசி அங்குள்ளவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்படுகிறது. மேலும் ஒரு சிலர் இந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இந்த சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளினால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • நெய்வேலி அருகே நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
    • கீழூர் சாலையில் வந்த போது, காரில் இருந்து திடீரென புகை வந்தது.

    கடலுார்:

    கடலுார் மாவட்டம், நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியை சேர்ந்தவர் குருசாமி, (வயது58) அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர், தனது மகன் எழிலுடன் மயிலாடுதுறையில் இருந்து மாருதிகாரில் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.காரை குருசாமி ஒட்டினார். நெய்வேலி அருகே கீழூர் சாலையில் வந்த போது, காரில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காரை நிறுத்திவிட்டு, குருசாமி, எழில் ஆகியோர் கீழே இறங்கி ஓடியதால் காயமின்றி தப்பினர். தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையஅலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர் கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுதும் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரிக்கின்றனர்.

    • சேத்தியாதோப்பு அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு அருகே தட்டான் ஓடைபகுதியை சேர்ந்தவர் ஆபரணம் (வயது 70). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டியுடன் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றார். அப்போது அந்த நபர் மூதாட்டியால் முதியோர் உதவி தொகை உங்களுக்கு தருவதாக கூறி நூதன முறையில் அவரிடம் இருந்து 4கிராம் காதணித்தோடு திருடி சென்றார். இது குறித்து மூதாட்டி சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் மூதாட்டியிடம் திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சேத்தியா தோப்பு அருகே குறுக்கு ரோடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்கி பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் முடிகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பதும் அந்த மூதாட்டி இடம் நூதன முறையில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

    ×