என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில்  தனியார் ஏஜென்சி அதிபர் வீட்டில் கொள்ளை
    X

    சிதம்பரத்தில் தனியார் ஏஜென்சி அதிபர் வீட்டில் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார்.
    • பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வாணியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிதம்பரத்தில் தனியார் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று மாலை வெங்க டேசன் ஊருக்கு திரும்பி னார். அப்போது பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×