என் மலர்tooltip icon

    கடலூர்

    பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட சப் -இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சிலர் பெண்களை கேலி, கிண்டல் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது23), விஜயகுமார்(29) ஆகிய இருவர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, மணிகண்டன், விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன.
    • கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    நாடு முழுவதும் 75 - ம் ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளிலும் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசிய கொடி ஏற்றி 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, பண்ருட்டி, விருத்தாச்சலம் ஆகிய ஏழு உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார்கள் என 1900 போலீசார்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக மாவட்ட ம் முழுவதும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருவதோடு அங்குள்ள மக்களிடம் தகவல் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

    இது மட்டுமின்றி மக்கள் அதிகமாக கூடும் இடமான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பஸ் நிலையங்கள், ெரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் எங்கேனும் வெடிகுண்டுகள் உள்ளதா? என்பதனை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளின் போலீசார் தீவிர சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தலைமை காவலர் முருகன் போலீஸ் வினோத்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயில்களில் தீவிர சோதனை நடத்தி, பயணிகளின் உடமைகளை காண்காணித்தனர். ரெயில்வே தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் சோதனை நடத்தினர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்த ரயில்கள் மற்றும் பயணிகளின் பார்சல்களை வெடிகுண்டு பரிசோதிக்கும் கருவிகளைக் கொண்டு போலீசார் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    • பண்ருட்டியில் மொபட் மீது லாரி மோதியதில் விவசாயி பலியானார்.
    • அவருக்கு கால்கள் மற்றும்தலையில் பலத்த காயம்ஏற்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி,திருவதிகை பழைய கடலூர் ரோட்டில் வசித்து வருபர் தியாகராஜன் (வயது72). விவசாயி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் புதுவை தூக்கணாம்பாக்கம் சென்று விட்டு திரும்பி பண்ருட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பண்ருட்டி ஹவுசிங் போர்டு அருகில் வந்து கொண்டியிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி அவரது மொபட் மீது மோதியதில் இதனால் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு கால்கள் மற்றும்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி லோகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • விசித்திரமான வகையில் கூடு கட்டியிருந்த பெரிய அளவிலான விஷ வண்டுகள்.
    • காவேரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்.

    கடலூர்:

    மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபு (வயது.46). இப்பகுதியில் உள்ள இவரது கான்கிரீட் வீட்டின் அருகே உள்ள இவரது பழைய ஓட்டு வீட்டில், கோபுவின் பாட்டி மனைவி காவேரி (வயது.72) என்பவர் வசித்து வந்தார். இந்த நிலையில், பழைய ஓட்டு வீட்டில் உள்ள பனை மரச் சாரத்தில், 3 அடுக்குகள் அமைத்து விசித்திரமான வகையில் கூடு கட்டியிருந்த பெரிய அளவிலான விஷ வண்டுகள், அங்கு படுத்திருந்த காவேரியை கடித்தது. இதனையடுத்து, காவேரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். இது குறித்த தகவலின்பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் (போக்குவரத்து) தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், அசோக், செல்வம் ஆகியோர் அங்கு விரைந்துச் சென்று, 3 அடுக்குகளில் விஷ வண்டுகள் கட்டியிருந்த கூட்டினை முற்றிலும் அகற்றி அப்புறபடுத்தினர்.

    • பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் வீரமணியை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம்-30 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 43). பிரபல ரவுடியான இவர் மீது நெய்வேலி டவுன் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு வீரமணி மனைவி மற்றும் குழந்தைகள் ஊருக்கு சென்று விட்டனர். வீரமணி மட்டும் இரவு வீட்டில் தூங்கினார்.

    இன்று அதிகாலை சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வீரமணியை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இன்று காலை வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வழிந்தது. இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது ரவுடி வீரமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வீரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கொலை செய்த நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும்.
    • கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும்.

    கடலூர்:

    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும். இந்த தண்ணீர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், பண்ருட்டி வழியாக கடலூர் ஆல்பேட்டையில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை நம்பி ஏராளமான ஏரி குளங்கள் உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் சாத்தனூர், கிருஷ்ணகிரி அணை நிரம்பி வழிந்தது. எனவே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் 1.20 லட்சம் கனஅடி நீர் வந்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஆற்றின் கழிமுக பகுதியான கடலூர் நகரம் ஆற்று வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. குறிப்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. நாணமேடு, உச்சிமேடு, கண்கடகாடு, தாழங்குடா பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளம் வடிந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர்.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கிருஷ்ணகிரி அணை நிரம்பியது. எனவே உபரி நீர் அணைத்தும் சாத்தனூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. இந்த அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறிபாய்ந்து நேற்று பன்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பகுதி வந்து சேர்ந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது. எனவே ஆற்றங்கரை பகுதியில் உள்ள கரைகள் அணைத்தும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தரைப்பாலம் பகுதியில் கற்கள் கொட்டப்பட்டு கரைகள் சீரமைக்கும்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட வருவாய்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • கடலூர் முதுநகரில் பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் திடீர் மாயமனார்.
    • கடலூர் முதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் செல்லங்குப்பம் சேர்ந்தவர் ஆறுமுகம் . இவரது 12 வயது மகன் கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 8-ம் வகுப்பு மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர் மாலை மாணவன் வழக்கம் போல் வீட்டிற்கு வருவது வழக்கம்.

    ஆனால் நேற்று வீட்டுக்கு வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    மேலும் அதே 8-ம் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவனும் விட்டுக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து இரண்டு மாணவர்களும் நண்பர்கள் என்பதால் வீட்டுக்கு செல்லாமல் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. மேலும் இரு வீட்டினரும் காணாமல் சென்ற மாணவர்களை தேடி வருகின்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் முதுநகர் பகுதியில் 3 சிறுமிகள் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று காணாமல் போனார்கள். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையின் பேரில் 3 சிறுமிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் இரண்டு மாணவர்கள் திடீர் என காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த (24) வயது இளைஞர் ஒருவருக்கும் கடந்த 10ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
    • போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி காமுட்டி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராசு மகள் மஞ்சு (வயது21) படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த (24) வயது இளைஞர் ஒருவருக்கும் கடந்த 10ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ரேஷன் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மஞ்சு வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மஞ்சுவின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் நடவடிக்கையில் தாமதம் படுத்துவதாக கூறி பெண்ணின் உறவினர்கள் நேற்று இரவு ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே திட்டக்குடி - விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆவினங்குடி போலீசார் போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காணாமல் போன பெண்ணை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார்.
    • அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    புதுவை மாநிலம் உழவர்கரை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் பலராமன். அவரது மனைவி கவிதா (வயது 45). இவர் மயிலாடுதுறையில் உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிதம்பரம் பஸ் நிலையம் வந்து இறங்கி னார். அப்போது தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார். அந்த டிராவல் பேக்கில் 10பவுன் நகை, பட்டுபுடவை ஆகியவை இருந்தது. திடீரென அந்த பெண் டிராவல் பேக்குடன் மாய மானார். அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சிதம்பரம் டவுன் போலீசில் கவிதா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

    திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரே நிழற்குடையில் முதியவர் பிணமாக கிடந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள பஸ் நிழல் குடையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் இதுகுறித்து பொதுமக்களிடம் விசாரணை செய்தபோது இவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதனையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவர் குறித்து விவரம் தெரிந்தால் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும் அவர் கட்டம் போட்ட சட்டை, கட்டம் போட்ட கைலி, முகத்தில் அதிக அளவு தாடியுடன் உள்ளார்.

    • சிதம்பரம் பல்கலைக்கழக மாணவி கடத்தப்பட்டார்.
    • புகார் மனுவில் தனது மகளை சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் கடத்தியதாக தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர்கோல்டன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். அவரது மகள் சுவேதா (வயது 24). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகத்தில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி பல்கலைகழகத்துக்கு செல்வதாக சுவேதா கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அசோக்குமார் தனது மகளை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகளை சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் கடத்தியதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து சுவேதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூரில் வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை கண்டித்து முதியவர் தீ குளிக்க முயன்றார்.
    • சுந்தரேசன் கால அவகாசம் கேட்டார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டினை சுந்தரேசன் (வயது 65) என்பவர் பயன்படுத்தி வருகிறார். இந்த வீட்டுக்கு வாடகை பாக்கியாக ரூ. 5 லட்சத்து 21 ஆயிரம் உள்ளது. இதனை கட்டாமல் இருந்ததால் அந்த வீட்டை காலி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சந்திரன் தலைமையில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் ராஜாம்பால் நகருக்கு சென்றனர். அப்போது சுந்தரேசன் வசித்து வந்த வீட்டுக்கு சீல் வைக்க அதிகாரிகள் முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தரேசன் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உஷாரான போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணை கேனை பறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் சுந்தரேசனிடம் கூறுகையில், கோர்ட்டு உத்தரவு படிதான் நாங்கள் சீல் வைக்க வந்துள்ளோம். எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதற்கு சுந்தரேசன் கால அவகாசம் கேட்டார். உடனே அதிகாரிகள் அதற்குள் வாடகை பணத்தை கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கும் சுந்தரேசன் கால அவகாசம் கேட்டதால் மறுத்த அதிகாரிகள் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

    ×