பண்ருட்டியில் பரிதாபம்: மொபட் மீது லாரி மோதியதில் விவசாயி பலி

பண்ருட்டியில் மொபட் மீது லாரி மோதியதில் விவசாயி பலியானார்.அவருக்கு கால்கள் மற்றும்தலையில் பலத்த காயம்ஏற்பட்டது.
பண்ருட்டியில் பரிதாபம்: மொபட் மீது லாரி மோதியதில் விவசாயி பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி,திருவதிகை பழைய கடலூர் ரோட்டில் வசித்து வருபர் தியாகராஜன் (வயது72). விவசாயி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் புதுவை தூக்கணாம்பாக்கம் சென்று விட்டு திரும்பி பண்ருட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பண்ருட்டி ஹவுசிங் போர்டு அருகில் வந்து கொண்டியிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி அவரது மொபட் மீது மோதியதில் இதனால் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு கால்கள் மற்றும்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி லோகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com