என் மலர்tooltip icon

    கடலூர்

    • உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.
    • அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பு.மலையனூரை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி கோகிலா. சம்பவத்தன்று இவர் உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். விருத்தாசலம் வந்து பஸ்சில் இருந்து இறங்கியபின்னர் தனது கைப்பையை கோகிலா சோதனை செய்தார். அதில் இருந்த நெக்லஸ், செயின, மோதிரங்கள் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ேபாலீசில் புகார் செய்தார். அப்போது அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட விருத்தாசலம் போலீசார் காணாமல் போன நகை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம்.
    • அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 40) விவசாயி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம். நேற்று அதே பகுதியில் கோவில் திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை அருள் செல்வம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் மனைவியிடையே வாய் தகராறு ஏற்பட்டு குடும்பத் தகராறாக மாறியது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் செல்வம் தனது வீட்டின் முன்னாள் இருந்த மற்றொரு கூரை வீட்டிற்கு சென்று அங்கு மனைவி சேலையால் தூக்கில் தொங்கினார்.

    இதைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அருள் செல்வம் மனைவி மஞ்சமாதா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டபோது ஒரு நபர் லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளார்.
    • கைது செய்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீசார் வண்டி கேட் அருகே ரோந்து பணியை மேற்கொண்டபோது ஒரு நபர் லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளார். தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திய போது பள்ளிப்படை பூதகேணி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன்வர்தீன் (63) என்பவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பண்ருட்டியில் நாளை மின்தடை என்று மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய ஊர்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

    • விளிம்பு நிலை மக்களின் வசிக்கும்வீடு, மனை இல்லாத இருளர்பழங்குடியினர் மக்கள் 245 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
    • 245 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.எந்த குடும்பமும் விடுபடவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி தாசில்தார் சிவா. கார்த்திகேயன் தலைமையில்75-வது சுதந்திர தின விழா முன்னிட்டுவிளிம்பு நிலை மக்களின் வசிக்கும்வீடு, மனை இல்லாத இருளர்பழங்குடியினர் மக்கள் 245 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தாசில்தார் சிவா. கார்த்திகேயன் திரிமங்கலம் 27 பேருக்கும், அக்கடவல்லி 12 பேர்காடாம்புலியூர் 93 பேர், அங்கு செட்டிபாளையம் 38 பேர், பனப்பாக்கம் 2 பேர், கரும்பூர்8 பேர்,வீரபெருமாநல்லூர் 6 பேர்திருவாமூர் 15 பேர், விசூர் 5 பேர்,கருக்கை 1 பேர்,பல்வராயநத்தம் 38 பேர் என மொத்தம் 245 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.எந்த குடும்பமும் விடுபடவில்லை என்றார்.

    • கடலூரில் சுதந்திர தினவிழா 65 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்.
    • மாணவ–மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கடலூர்:

    75 - வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீடுகளிலும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசு தெரிவித்திருந்தனர்.அதன்படி இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் கோலாகலமாக நடந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வந்தார். கலெக்டருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணே சன் உடன் வந்தார். இதனை தொடர்ந்து காலை 9.05 மணிக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர் சமாதான புறா மற்றும் வண்ணப் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட கலெக்டரை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திறந்த ஜீப்பில் அழைத்துச்சென்றார். அதைத்தொடர்ந்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஊர்க்காவல்படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப்பணித்திட்ட மாணவ–மாணவிகள், இளஞ்செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் சாரணர் படையினர் மைதானத்தில் வரிசையாக அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.அதன்பிறகு சுதந்திரபோராட்ட தியாகிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் கவுரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து வருவாய் துறை, தோட்டக்க லைத்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 65 பயனாளிகளுக்கு 26 லட்சத்து 75 ஆயிரத்து 892 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை தீயணைப்பு துறை சுகாதாரப் பணிகள் வருவாய் துறை மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை சிறப்பாக பணிபுரிந்த 138 அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதன்பிறகு மாணவ–மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    விழாவில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா, தாசில்தார் பூபாலச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு நடன நிகழ்ச்சிகள், போலீஸ் அணிவகுப்பு போன்ற வற்றை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி ஆனார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (35) இவர் நஞ்சைமகத்து வாழ்க்கை அருகே படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு உள்ள தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் அருகே மீன்பிடிக்கும் போது எதிர்பாராவிதமாக படகு நீரில் கவிழ்ந்ததில் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனையடுத்து இவரது மனைவி ராஜேஸ்வரி கிள்ளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு ஜூனியர் இளைஞர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்டத் தலைவர் வேலவன் தொடங்கி வைத்தார் மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 150 விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் தேர்வு பெறுபவர்கள் மேற்கண்ட போட்டியில் கலந்து கொள்ளலாம் இதில் மாவட்ட கபடி பயிற்சியாளர் புஷ்பராஜ், தேசிய வீரர் நாணமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் மாயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நடராஜன் செய்திருந்தார்.

    • வனத்துறையினர் மானை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
    • அரசுக்கு சொந்தமான தேக்க மரங்கள் அதிக அளவில் குறைந்து வருகின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே மா.கொளக்குடிபகுதியில் இன்று அதிகாலை 50 கிலோ எடை கொண்ட மான் ஒன்று பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ளது. வீராணம் ஏரியில் சுமார் 5-க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளது. அது தற்பொழுது வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதற்கு தங்குவதற்கு போதிய இடம் இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. கடந்த ஒரு மாதமாக சுத்தி திரிந்த இந்த மான் தற்பொழுது வெறி நாய்கள் துரத்தியதில் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சம் அடைந்தது. இந்த மானை பொது மக்கள் பத்திரமாக பிடித்து வைத்து, வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்த னர். வனத்துறைக்கு தகவல் கொடுத்து சுமார் 3 மணி நேரம் ஆகியும் வனத்துறையினர் மானை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.

    விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறை யினர் முன்வர வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது போன்று அலட்சி யம் காட்டும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதே போன்று அரசுக்கு சொந்த மானதேக்க மரங்கள் அதிக அளவில் குறைந்து வருகின்றன. இதற்கும் வனத்துறை என்ன செய்கி றது என்று தெரியா மல் போகிறது. காடுகளை வளர்க்கின்ற நேரத்தில் காடுகளை அழித்து வரும் குற்றவாளிகளை கண்ட றிந்து வனத்துறையி னர் தீவிரை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வித்துள்ளர்.

    ஒரே நாளில் டாஸ்மாக் பள்ளிக்கூடம் 4 கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில்போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலப்பாக்கதுறை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று வழக்கம்போல் விற்பனை முடிந்து இரவு 10 மணி அளவில் அங்கு பணியாற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து திரண்டு வந்தனர்.

    ஆட்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். இந்த கொள்ளை முயற்சியில் அருகில் இருந்தவர்கள் உடனே வந்ததால் அங்கு திருட முடியாமல் ஏமாற்றுத்துடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.இது குறித்த தகவல் அறிந்த சேத்தியாதோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தார். மேலும் காட்டுமன்னார்கோவில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காமிரா மூலம் கொள்ளையர்களை பிடிக்க துப்பு துலக்கி வருகின்றனர்.

    மேலும் அதே பகுதியான சண்டன் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று இரவு நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த லேப்டாப் மற்றும் உதிரிபாகங்களையும் திருடி சென்றனர்.

    மேலும் அதே பகுதியில் சுற்றி உள்ள 4 கோவில்களிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த 4 கோவில்களில் உள்ள உண்டி யலின் பூட்டை உடைத்து 30,000 பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் காட்டு மன்னார்கோவில் போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடுகின்றனர். ஒரே நாளில் டாஸ்மாக் பள்ளிக்கூடம் 4 கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நெய்வேலியில் ரவுடி வெட்டிக்கொன்ற கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    • வீரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

    கடலூர்:

    நெய்வேலி வட்டம் 30 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது43.). பிரபல ரவுடியான வீரமணி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. நேற்று அதிகாலை வீரமணியை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அவர் தாய் மற்றும் அவர் உறவினர்கள் வீரமணி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நெய்வேலி  போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன், நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பென்டர் லதா மற்றும் போலீசார் வீரமணி படுகொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ரவுடி வீரமணியின் கூட்டாளிகள் சேர்ந்து இந்த கொலையை செய்து உள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக நெய்வேலி டவுன் ஷிப் வட்டம் 21- ஐ சேர்ந்த குணசீலன், மகேஷ்குமார், சந்திரசேகர், பார்த்திபன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    விருத்தாசலம் நீதிமன்றம் அருகே தூக்கில் பிணமாக வாலிபர் தொங்கினார்.

    கடலூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த செல்வராஜ்.அவரது மகன் அருள் செல்வன் (வயது20), இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார்.

    கடந்த 11ஆம் தேதியன்று வீட்டில் இருந்து காணாமல் போன இவர் விருத்தாசலம் நீதிமன்றம் அருகே உள்ள இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×