புவனகிரி அருகே குடி போதையில் தூக்கு போட்டு விவசாயி தற்கொலை

அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார்.
புவனகிரி அருகே குடி போதையில் தூக்கு போட்டு விவசாயி தற்கொலை
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 40) விவசாயி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம். நேற்று அதே பகுதியில் கோவில் திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை அருள் செல்வம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் மனைவியிடையே வாய் தகராறு ஏற்பட்டு குடும்பத் தகராறாக மாறியது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் செல்வம் தனது வீட்டின் முன்னாள் இருந்த மற்றொரு கூரை வீட்டிற்கு சென்று அங்கு மனைவி சேலையால் தூக்கில் தொங்கினார்.

இதைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அருள் செல்வம் மனைவி மஞ்சமாதா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com