என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூரில் மாவட்ட அளவிலான கபடி வீரர்கள் தேர்வு
Byமாலை மலர்14 Aug 2022 2:57 PM IST
- கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
- மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
தமிழ்நாடு ஜூனியர் இளைஞர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்டத் தலைவர் வேலவன் தொடங்கி வைத்தார் மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 150 விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் தேர்வு பெறுபவர்கள் மேற்கண்ட போட்டியில் கலந்து கொள்ளலாம் இதில் மாவட்ட கபடி பயிற்சியாளர் புஷ்பராஜ், தேசிய வீரர் நாணமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் மாயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நடராஜன் செய்திருந்தார்.
Next Story
×
X