என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி வீரர்கள்"

    • இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.
    • கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.

    எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி 2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு!

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

    கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.

    கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.

    நேற்று நான் பைசன் காளமாடனில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாநில கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட நடுவர்குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். இணை செயலாளர் வாலீசன் நன்றி கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் மாவட்ட ஆண்கள் சீனியர் அணிக்கான பயிற்சி முகாம், மாவட்ட கபடி கழக மைதானத்தில் மே 1 முதல் 4 வரை நான்கு நாட்கள் நடந்தது. மாநில கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் பயிற்சியை தொடங்கி வைத்தார்.பயிற்சி முகாமில் 18 வீரர்கள் பங்கேற்றனர். 12 பேர் அணியை தேர்வுக்குழு தலைவர் ருத்ரன், வாலிசன் தேர்வு செய்தனர். பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

    மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமதாஸ், செய்தி தொடர்பாளர் சிவபாலன், புரவலர் சங்கீத் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு, டிராக் சூட், ஷூ, பேக், பெட்சீட், டி சர்ட், விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது. மாவட்ட நடுவர்குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். இணை செயலாளர் வாலீசன் நன்றி கூறினார்.

    மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ், வளர்ச்சிக்குழு தலைவர்கள் ராஜூ, காரல் மார்க்ஸ், ரவிச்சந்திரன், நாகராஜ், சேகர், சிவகுரு, செந்தில்மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பயிற்சி பெற்ற அணி பயிற்சியாளர் தண்டபாணி, அணித்தலைவர் வினோத் தலைமையில் செங்கல்பட்டில் நடக்கும் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர். 

    • கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு ஜூனியர் இளைஞர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்டத் தலைவர் வேலவன் தொடங்கி வைத்தார் மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 150 விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் தேர்வு பெறுபவர்கள் மேற்கண்ட போட்டியில் கலந்து கொள்ளலாம் இதில் மாவட்ட கபடி பயிற்சியாளர் புஷ்பராஜ், தேசிய வீரர் நாணமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் மாயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நடராஜன் செய்திருந்தார்.

    ×