மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு திருப்பூர் மாவட்ட கபடி வீரர்கள் தேர்வு

மாநில கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் பயிற்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட நடுவர்குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். இணை செயலாளர் வாலீசன் நன்றி கூறினார்.
கபடிவீரர்கள்
கபடிவீரர்கள்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் மாவட்ட ஆண்கள் சீனியர் அணிக்கான பயிற்சி முகாம், மாவட்ட கபடி கழக மைதானத்தில் மே 1 முதல் 4 வரை நான்கு நாட்கள் நடந்தது. மாநில கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் பயிற்சியை தொடங்கி வைத்தார்.பயிற்சி முகாமில் 18 வீரர்கள் பங்கேற்றனர். 12 பேர் அணியை தேர்வுக்குழு தலைவர் ருத்ரன், வாலிசன் தேர்வு செய்தனர். பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமதாஸ், செய்தி தொடர்பாளர் சிவபாலன், புரவலர் சங்கீத் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு, டிராக் சூட், ஷூ, பேக், பெட்சீட், டி சர்ட், விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது. மாவட்ட நடுவர்குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். இணை செயலாளர் வாலீசன் நன்றி கூறினார்.

மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ், வளர்ச்சிக்குழு தலைவர்கள் ராஜூ, காரல் மார்க்ஸ், ரவிச்சந்திரன், நாகராஜ், சேகர், சிவகுரு, செந்தில்மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பயிற்சி பெற்ற அணி பயிற்சியாளர் தண்டபாணி, அணித்தலைவர் வினோத் தலைமையில் செங்கல்பட்டில் நடக்கும் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com