திட்டக்குடி அருகே இளம்பெண் மாயமானதால் உறவினர்கள் சாலை மறியல்

இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த (24) வயது இளைஞர் ஒருவருக்கும் கடந்த 10ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திட்டக்குடி அருகே இளம்பெண் மாயமானதால் உறவினர்கள் சாலை மறியல்
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி காமுட்டி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராசு மகள் மஞ்சு (வயது21) படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த (24) வயது இளைஞர் ஒருவருக்கும் கடந்த 10ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ரேஷன் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மஞ்சு வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மஞ்சுவின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் நடவடிக்கையில் தாமதம் படுத்துவதாக கூறி பெண்ணின் உறவினர்கள் நேற்று இரவு ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே திட்டக்குடி - விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆவினங்குடி போலீசார் போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காணாமல் போன பெண்ணை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com