பெண்ணை மானபங்கம் படுத்திய வாலிபருக்கு வலை

பெண்ணை மானபங்கம் படுத்திய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.கொலை மிரட்டல் விடுத்தார்.
பெண்ணை மானபங்கம் படுத்திய வாலிபருக்கு வலை
Published on

கடலூர்:

புவனகிரி, கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அன்பரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முன் விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமரசம் செய்தனர். அன்று இரவு அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற அன்பரசன், ஆபாசமாக திட்டி, அவரை மானபங்கம் படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, அன்பரசனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com