என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பண்ருட்டி பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது- பரபரப்பு தகவல்கள்
  X

  கைதான கொள்ளையன் ஆறுமுகம்.

  பண்ருட்டி பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது- பரபரப்பு தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பண்ருட்டி பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
  • மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் 3 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடி சென்றனர்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்பிலான காமிரா மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அருகில் இருந்த ரவி என்பவரது மருந்து கடையிலிருந்து பூட்டை உடைத்து மருந்துகளை திருடி சென்றனர். இதுதவிர தாமோதரன் மெட்டல் கடையை பூட்டு உடைத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்று உள்ளனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்தபோது, மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் 3 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடி சென்றனர். பின்னர் அங்கு செட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

  இதுகுறித்து டெல்டா பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.மலையனூர் சேர்ந்த ஆறுமுகம் (வயது 28) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், மேலும் ஒரு நபர் இவருடன் இணைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமின்றி மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்திற்கு ஈடுபடுவதற்காக அங்குசெட்டிபாளையம் பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு பண்ருட்டி பகுதிக்கு வந்து உள்ளனர். பின்னர் 3 கடைகளில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி மீண்டும் மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு சென்றது தெரியவந்துள்ளது. அதன் பிறகு தாங்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பி சென்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த நிலையில் ஆறுமுகம் மீது ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் மற்றொரு மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  Next Story
  ×