என் மலர்
கடலூர்
- ஆடுகளை ஓட்டி வந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
- சாலை முழுவதும் ஆடுகளின் ரத்தம் வெள்ளமாக ஓடியதால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.
வேப்பூர்:
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மகன் லட்சுமணன் (வயது 40) ஆடுகள் மேய்த்து வந்தார். இவர்களது உறவினர்களான ராமர், செல்வம், அய்யப்பன் ஆண்டுதோறும் ஆடுகளை வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு ஆடுகளுக்கு பட்டியமைத்து கிடை போட்டு வருவது வழக்கம்.
அதன்படி காசிநாதன் சுமார் 300 ஆடுகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை பகுதிகளில் ஆடுகளுக்கு பட்டியமைத்து விற்பனை செய்து வந்தனர்.
நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஆடுகளை காசிநாதன், அவரது மகன் லட்சுமணன் எலவனாசூர் கோட்டையில் இருந்து வேப்பூருக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓட்டி சென்றனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது.
அந்த பஸ் வேப்பூர்-சேப்பாக்கம் மணி முக்தாறு அருகே வந்த போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் கூட்டத்தில் புகுந்தது. மேலும் லட்சுமணன் மீதும் பஸ் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 125 ஆடுகள் பலியானது. ஆடுகளை ஓட்டி வந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தால் சாலை முழுவதும் ஆடுகளின் உடல் சாலையின் நீண்ட தூரம் கிடந்தது.
மேலும் சாலை முழுவதும் ஆடுகளின் ரத்தம் வெள்ளம் போல் ஓடியது.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த ஆடுகளை எல்லாம் சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த ஆடுகள் எத்தனை மற்றும் படுகாயம் அடைந்த ஆடுகள் குறித்து கணக்கீடு செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து காசிநாதன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை முழுவதும் ஆடுகளின் ரத்தம் வெள்ளமாக ஓடியதால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.
- ஆபாச படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டன் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார்.
- ஆசைக்கு அடிபணியாவிட்டால் வீடியோவை வெளியிடுவேன் கூறி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரிய குமட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். அவரது மகன் மணிகண்டன். (வயது 26). கூலி தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். ஆனால் அந்த சிறுமி மறுத்து உள்ளார். உடனே மணிகண்டன் திராவகம் உடலில் ஊற்றி விடுவதாக அந்த சிறுமியை மிரட்டி ஒதுக்குபுறத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை மணிகண்டன் பலாத்காரம் செய்தார். அதன்பின்னர் அதனை மணிகண்டன் படம் பிடித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து ஆபாச படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டன் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதற்கு அடிபணியாவிட்டால் வீடியோவை வெளியிடுவேன் கூறி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். தொடர்ந்து இதுபோன்ற அவல நிலை நீடித்ததால் அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டதின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
- சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம்:
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று காலை (28-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது பொது தீட்ஷிதர்களின் உத்ஸவ ஆச்சார்யர் சு.ரா.நடராஜகுஞ்சிதபாத தீஷிதர் மார்கழி ஆருத்ரா கொடியேற்ற திருவிழாவை தொடங்கி வைத்து கொடி மரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட பொது தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க ஆருத்ரா தரிசன கொடியேற்ற நிகழ்வு தொடங்கியது
நாளை (29-ந்தேதி) வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா, 30-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 31-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, ஜன.1-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெரு வடைச்சான் வீதி உலாவும், 2-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 3-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.
4-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்கு திரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 5-ந் தேதி தேர்த்திரு விழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 6-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
அதன் பின்பு சொர்ண அபிஷேகம் நடைபெறும் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
7-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்ஷிதர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது, இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- அதிரடியாக உள்ளே சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பிளேடு, கஞ்சா, பீடி, சிகரெட் ஆகிய பொருட்களை சோதனை செய்து சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிரடியாக உள்ளே சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சோதனையில் கைதிகளிடம் இருந்து தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பான்மசாலா மற்றும் ஆயுதங்கள் கிடைக்கின்றதா? என்பது சோதனை முடிவில் தெரிய வரும். இதுமட்டுமன்றி கைதிகளுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதனையும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு செந்தில் குமார், சிறை அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் மத்திய சிறைச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சிறுவன் ஒருவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவன் மீது மோதியது.
- 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
கடலூர்:
கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடியது. அப்போது சாலை ஓரத்தில் இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டார். பின்னர் சாலையில் இருந்த சிக்னல் கம்பத்தின் மீது மீண்டும் கார் மோதி சாலையில் ஓரத்தில் தலை குப்புற பயங்கர சட்டத்துடன் கார் கவிழ்ந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து தூக்கி வீசப்பட்ட மாணவனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 பிள்ளைகளை காரில் இருந்து பாதுகாப்பாக பொதுமக்கள் மீட்டனர். இந்த விபத்தில் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- மாரியப்பன் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.
- திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. இதில் ஓடையில் விழுந்த அவர் முச்சுத்திணறி இறந்து விட்டார்.
கடலூர்:
சிதம்பரத்தை அடுத்த அகரநல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 68). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். நிலத்தை சுற்றிப்பார்த்து விட்டு அருகில் இருந்த ஓடையில் கை, கால் கழுவச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. இதில் ஓடையில் விழுந்த அவர் முச்சுத்திணறி இறந்து விட்டார்.
இது குறித்து அவரது மகன் சுப்பரமணியன் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி பழக்கடை உரிமையாளர் பலியானார்.
- பின்னால் சென்ற தனியார் பஸ் திடீரென்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
கடலூர் சாவடி சேர்ந்த சரவணன் (வயது 50). பழக்கடை கடை நடத்தி வந்தார். இன்று காலை கடலூர் இருந்து புதுச்சேரிக்கு பழங்கள் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் அருகே சின்ன கங்கணாங் குப்பம் என்ற பகுதி யில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்ற தனியார் பஸ் திடீரென்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- மறுபுறம் பணிகள் முழுவதும் முடிவடையாத நிலை யில் சாலை கரடுமு ரடாக இருந்து வருகிறது.
- லாரியை ஓட்டி சென்ற டிரைவர் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
கடலூர்:
விருத்தாசலம்- உளுந்தூ ர்பேட்டை சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் ஒருபுறம் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் மறுபுறம் பணிகள் முழு வதும் முடிவடையாத நிலை யில் சாலை கரடுமு ரடாக இருந்து வருகிறது. நேற்று இரவு 9:30 மணி அளவில் விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி காலி அட்டை பெட்டிகள் ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலையில் கரடு முரடான வழியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்தது. லாரியை ஓட்டி சென்ற டிரைவர் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தால் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இந்த ஆண்டு தனது தந்தையுடன் வசித்து சின்னபகண்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்
- நீண்டநேரம் வீட்டுகதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கே.டி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. அவரது மகள் காவியா (வயது 13). இவரது தாயார் வரலட்சுமி இறந்து விட்டார். எனவே காவியா தனது அத்தை ஊரான விழுப்புரம் அருகே குன்னம் கிராமத்தில் தங்கி 7-ம் வகுப்பு வரை படித்து வந்தார். இந்த ஆண்டு தனது தந்தையுடன் வசித்து சின்னபகண்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பிரபு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த காவியா தூக்கில் பிணமாக தொங்கினார். நீண்டநேரம் வீட்டுகதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே ஜன்னல் வழியே எட்டிபார்த்தபோது காவியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகு மார் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்தனர். காவியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரபுவிடம் விசாரித்தபோது தனது மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவி த்தார். ஆனால் காவியா வின் தலையில் காயம் உள்ளது. எனவே இந்த சாவு குறித்து போலீசார் சந்தேகிக்கி றார்கள். பிரேத பரிசேதனை முடிவில் காவியா எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.
- அவர்கள் விலாசம் கேட்பது போல் நடித்து பார்வதி கண்ணில் மிளகாய் பொடியை தூவினர்
- திட்டக்குடி செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பூலா ம்பாடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் விருத்தகிரி. அவரது மனைவி பார்வதி (வயது45). இவர் புல்லூர் செல்லும் மண் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாகஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வந்தனர். அவர்கள் விலாசம் கேட்பது போல் நடித்து பார்வதி கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் கீேழ தள்ளி அவரது கழுத்தில் 5 பவுன் தாலிச் செயினை பறிக்க முயன்றனர்.
அப்போது பார்வதி செயினை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தம் போட்டுள்ளார் அதை பொறுப்படுத்தாத மர்ம நபர்கள் பாதியை மட்டும் அறுத்து கொண்டு திட்டக்குடி செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் சென்றனர். இது குறித்து பார்வதி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
- இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிகளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் விருத்தாச்சலம் -திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் இறையூர் கிராமத்திலிருந்து திட்டக்குடி நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்றது.அப்போது அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் (28), பழனிவேல் மனைவி அன்புச்செல்வி (40) ,இறையூர் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மகள் கலைமதி (20), ஆகியோர் காயம் அடைந்தனர்.
இவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கு முதல் உதவி அளித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.
- கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
- 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கிராம பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-
வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், நத்தப்பட்டு, முள்ளி கிராம்பட்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றோம். எங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் கடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகே மாநகராட்சி குப்பையை கொட்டுவதால் குடிநீர் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தையும் அதனை சார்ந்து வாழும் விவசாயக் கூலி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் டிஎஸ்.பி. கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.






