search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car overturns"

    • சிறுவன் ஒருவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவன் மீது மோதியது.
    • 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடியது. அப்போது சாலை ஓரத்தில் இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டார். பின்னர் சாலையில் இருந்த சிக்னல் கம்பத்தின் மீது மீண்டும் கார் மோதி சாலையில் ஓரத்தில் தலை குப்புற பயங்கர சட்டத்துடன் கார் கவிழ்ந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து தூக்கி வீசப்பட்ட மாணவனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 பிள்ளைகளை காரில் இருந்து பாதுகாப்பாக பொதுமக்கள் மீட்டனர். இந்த விபத்தில் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • நெல்லையை அடுத்த வன்னிகோனேந்தல் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் கனகராஜ்(வயது 28).
    • தேவர்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த வன்னிகோனேந்தல் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் கனகராஜ்(வயது 28).

    இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று கழுகுமலைக்கு சவாரி சென்றுவிட்டு இரவு தேவர்குளத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். தேவர்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் கனகராஜ் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதனை பார்த்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அங்கு விரைந்த சென்ற போலீசார் இடிபாட்டில் சிக்கியிருந்த கனகராஜை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரவநல்லூரில் சாலை விரிவாக்க பணிக்காக பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கார் பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கொம்பையா பாண்டியன் ( வயது 27).

    இவர் உறவினருடன் தனது காரில் குற்றாலம் சென்றார். நேற்று நள்ளிரவில் மீண்டும் அவர்கள் ஊர் திரும்பினர்.

    வீரவநல்லூரில் சாலை விரிவாக்க பணிக்காக பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கமாக வாகனங்கள் செல்லும் சாலைக்கு அருகே மற்றொரு சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

    இரவு நேரத்தில் இதனை கவனிக்காத கொம்யைா பாண்டியன் வழக்கமான சாலையில் சென்றுள்ளார்.

    அப்போது கார் பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வீரவநல்லூர் போலீசார் விரைந்து சென்று கொம்பையா பாண்டியன் உள்ளிட்டவர்களை உடனடியாக மீட்டனர். இதில் அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏற்படவில்லை.

    மேலும் பள்ளத்தில் கவிழ்ந்த காரும் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை அருகே நடு ரோட்டில் கார் கவிழ்ந்தது பெண் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்
    • புதுவையில் கார் கவிழ்ந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கார் கவிழ்ந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் இவரது மனைவி நளினி உள்ளிட்ட 4 பேர் இன்று சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

    திண்டிவனம்-புதுவை பைபாஸ் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது காருக்குப் பின்னால் வந்த டிப்பர் லாரி உரசுவது போல் வந்தது. காரை ஓட்டிய நளினி பயந்து சாலை நடுவே இருந்த கட்டையில் மோதினார்.

    அப்பொழுது கார் பல்டி அடித்து தலை குப்புற சாலையில் கவிழ்ந்தது.

    இதில் லேசான காயத்துடன் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×