வீரவநல்லூரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

வீரவநல்லூரில் சாலை விரிவாக்க பணிக்காக பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.கார் பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.
பள்ளத்தில் கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
பள்ளத்தில் கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கொம்பையா பாண்டியன் ( வயது 27).

இவர் உறவினருடன் தனது காரில் குற்றாலம் சென்றார். நேற்று நள்ளிரவில் மீண்டும் அவர்கள் ஊர் திரும்பினர்.

வீரவநல்லூரில் சாலை விரிவாக்க பணிக்காக பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கமாக வாகனங்கள் செல்லும் சாலைக்கு அருகே மற்றொரு சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் இதனை கவனிக்காத கொம்யைா பாண்டியன் வழக்கமான சாலையில் சென்றுள்ளார்.

அப்போது கார் பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வீரவநல்லூர் போலீசார் விரைந்து சென்று கொம்பையா பாண்டியன் உள்ளிட்டவர்களை உடனடியாக மீட்டனர். இதில் அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏற்படவில்லை.

மேலும் பள்ளத்தில் கவிழ்ந்த காரும் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com