search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "overturned truck"

    • புதுவைக்கு வந்த சிமெண்ட் லாரி நேற்று இரவு வில்லியனூரில் இருந்து பத்துகண்ணு பகுதியை நோக்கி சென்றது
    • நிலை குலைந்த லாரி டிரைவர் விஜயகுமார் லாரியை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்றார்.

     புதுச்சேரி:

    விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு வந்த சிமெண்ட் லாரி நேற்று இரவு வில்லியனூரில் இருந்து பத்துகண்ணு பகுதியை நோக்கி சென்றது. அப்போது எதிரே வந்த கார் திடீரென நிலை தடுமாறி லாரி மீது மோதுவது போல் வந்தது. இதில் நிலை குலைந்த லாரி டிரைவர் விஜயகுமார் லாரியை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்றார்.

    ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் விஜயகுமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகளை வேறு வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.

    இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மறுபுறம் பணிகள் முழுவதும் முடிவடையாத நிலை யில் சாலை கரடுமு ரடாக இருந்து வருகிறது.
    • லாரியை ஓட்டி சென்ற டிரைவர் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    விருத்தாசலம்- உளுந்தூ ர்பேட்டை சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் ஒருபுறம் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் மறுபுறம் பணிகள் முழு வதும் முடிவடையாத நிலை யில் சாலை கரடுமு ரடாக இருந்து வருகிறது. நேற்று இரவு 9:30 மணி அளவில் விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி காலி அட்டை பெட்டிகள் ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலையில் கரடு முரடான வழியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்தது. லாரியை ஓட்டி சென்ற டிரைவர் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தால் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூரில்வடிகால் வாய்க்காலில் லாரி கவிழ்ந்தலால் பரபரப்பு நிலலியது.

    கடலூர்:

    திண்டிவனத்தில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கடலூருக்கு வந்தது. பின்னர் கடலூர் - சிதம்பரம் சாலையில் நடைபெறும் கட்டிட பணிக்காக சாலை ஓரத்தில் டிரைவர் லாரியை நிறுத்தினார். இந்த நிலையில் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி, வடிகால் வாய்க்கால் உடைந்து கவிழ்ந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சிறிது நேரம் நின்றனர். பின்னர் லாரி சாலை ஓரமாக நின்றிருந்ததால் பெருமளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் வடிகால் வாய்க்கால் உடைந்து லாரி ஒரு பகுதி முழுவதும் கவிழ்ந்ததால் லாரிலிருந்து ஜல்லிக்கற்களை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் லாரி அருகே வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    ×