கடலூரில் பரபரப்பு: வடிகால் வாய்க்காலில் கவிழ்ந்த லாரி

கடலூரில்வடிகால் வாய்க்காலில் லாரி கவிழ்ந்தலால் பரபரப்பு நிலலியது.
வடிகால் வாய்க்காலில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை படத்தில் காணலாம். 
வடிகால் வாய்க்காலில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை படத்தில் காணலாம். 
Published on

கடலூர்:

திண்டிவனத்தில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கடலூருக்கு வந்தது. பின்னர் கடலூர் - சிதம்பரம் சாலையில் நடைபெறும் கட்டிட பணிக்காக சாலை ஓரத்தில் டிரைவர் லாரியை நிறுத்தினார். இந்த நிலையில் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி, வடிகால் வாய்க்கால் உடைந்து கவிழ்ந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சிறிது நேரம் நின்றனர். பின்னர் லாரி சாலை ஓரமாக நின்றிருந்ததால் பெருமளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் வடிகால் வாய்க்கால் உடைந்து லாரி ஒரு பகுதி முழுவதும் கவிழ்ந்ததால் லாரிலிருந்து ஜல்லிக்கற்களை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் லாரி அருகே வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com