search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை
    X

    கடலூர் மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

    • கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • அதிரடியாக உள்ளே சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பிளேடு, கஞ்சா, பீடி, சிகரெட் ஆகிய பொருட்களை சோதனை செய்து சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிரடியாக உள்ளே சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த சோதனையில் கைதிகளிடம் இருந்து தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பான்மசாலா மற்றும் ஆயுதங்கள் கிடைக்கின்றதா? என்பது சோதனை முடிவில் தெரிய வரும். இதுமட்டுமன்றி கைதிகளுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதனையும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு செந்தில் குமார், சிறை அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் மத்திய சிறைச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×