ஓடையில் விழுந்து விவசாயி சாவு

மாரியப்பன் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. இதில் ஓடையில் விழுந்த அவர் முச்சுத்திணறி இறந்து விட்டார்.
ஓடையில் விழுந்து விவசாயி சாவு
Published on

கடலூர்:

சிதம்பரத்தை அடுத்த அகரநல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 68). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். நிலத்தை சுற்றிப்பார்த்து விட்டு அருகில் இருந்த ஓடையில் கை, கால் கழுவச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. இதில் ஓடையில் விழுந்த அவர் முச்சுத்திணறி இறந்து விட்டார்.

இது குறித்து அவரது மகன் சுப்பரமணியன் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com