திட்டக்குடி அருகே விபத்து லாரி மீது கார் மோதல்- 3 பேர் படுகாயம்

அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
திட்டக்குடி அருகே விபத்து லாரி மீது கார் மோதல்- 3 பேர் படுகாயம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிகளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் விருத்தாச்சலம் -திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் இறையூர் கிராமத்திலிருந்து திட்டக்குடி நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்றது.அப்போது அந்த கார் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பக்கத்தில் உரசி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் (28), பழனிவேல் மனைவி அன்புச்செல்வி (40) ,இறையூர் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மகள் கலைமதி (20), ஆகியோர் காயம் அடைந்தனர்.

இவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கு முதல் உதவி அளித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆவின ங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com