என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வாலிபர் போக்சோவில் கைது
- ஆபாச படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டன் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார்.
- ஆசைக்கு அடிபணியாவிட்டால் வீடியோவை வெளியிடுவேன் கூறி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரிய குமட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். அவரது மகன் மணிகண்டன். (வயது 26). கூலி தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். ஆனால் அந்த சிறுமி மறுத்து உள்ளார். உடனே மணிகண்டன் திராவகம் உடலில் ஊற்றி விடுவதாக அந்த சிறுமியை மிரட்டி ஒதுக்குபுறத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை மணிகண்டன் பலாத்காரம் செய்தார். அதன்பின்னர் அதனை மணிகண்டன் படம் பிடித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து ஆபாச படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டன் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதற்கு அடிபணியாவிட்டால் வீடியோவை வெளியிடுவேன் கூறி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். தொடர்ந்து இதுபோன்ற அவல நிலை நீடித்ததால் அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டதின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.






