என் மலர்tooltip icon

    கடலூர்

    • ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43). கூலி தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன், சிவராஜ் உட்பட 4 பேர் பொட்டகுளம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சிவகுமாருக்கும், மணிவண்ணன் தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் மணிவண்ணன், சிவராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிவண்ணன், சிவராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    • கடலூர் அருகே மனைவி திட்டியதால் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). விவசாயக் கூலி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் மீண்டும் சண்டை வந்ததால் கோபமடைந்த சீனுவாசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கிய நிலையில் அவரது வீட்டின் அருகே கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீரில் பொம்மை மிதந்து செல்வதாக நினைத்து அதன் அருகே சென்று பார்த்தனர்.
    • பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததை கண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அங்குள்ள சிறுவர்கள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் பொம்மை மிதந்து செல்வதாக நினைத்து அதன் அருகே சென்று பார்த்தனர். ஆனால் அது பொம்மையல்ல குழந்தை என்பதை கண்டனர். அருகிலிருந்தவர்களிடம் சிறுவர்கள் தகவல் கூறினர். அங்கு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வந்து பார்த்த பொழுது பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததை கண்டனர். உடனடியாக திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்டு கரைபகுதியில் வைத்தனர் பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தண்ணீரில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்து வீசப்பட்டிருக்கலாம் என்பதும், கோழியூர் பகுதியை சேர்ந்த குழந்தை இல்லை என்பதும் தெரியவந்தது. வேறு யாரேனும் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வீசி சென்று இருக்கிறார்களா என போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே அம்மன் கோவிலில் தாலி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூர் காலனியில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12-ந் தேதி மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிசென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.நேற்று இரவு விசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர்.இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் 2 பேரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    உடனே 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்க ப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் திருடியதை ஒப்புக்கொண்டனர். உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் அய்யனார் (வயது 35), அங்கப்பன் (25) என்றும் 2 பேரும் விசூர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து அம்மன் தாலி, குத்து விளக்கு பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார்.
    • அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கீழே கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அர்ச்சகர் பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் பார்த்த போது பொருட்கள் மற்றும் சாமி சிலைகள் இருக்கும் அறையின் பூட்டையும் உடைக்க முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் , ஏதேனும் சாமி சிலை மற்றும் பொருட்கள் திருடு சென்று உள்ளதா? என்பதை பார்வை யிட்டனர் அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.

    இந்த நிலையில் கோவிலில் 3-வது முறையாக மர்ம நபர்கள் திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் சிலையில் அணிந்திருந்த வெள்ளி பூணூலை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த முறை மீண்டும் பூட்டை உடைத்து திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற பெண்களுக்கான இலவச பஸ்சில் சென்றனர்.
    • தினக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் திடீரென இலவச பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே முருகன் குடி கிராமத்தில் நாள் தோறும் தினக்கூலிவேலைக்காக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திட்டக்குடி பகுதிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற பெண்களுக்கான இலவச பஸ்சில் சென்றனர்.

    ஆனால் இந்த பஸ் முருகன்குடியில் நிற்காமல் சென்றது. தொடர்ந்து வந்த 3-வது பஸ்களும் முருகன்குடி கிராமத்தில் நிற்காமல் சென்றது. இதனால் கடந்த ஒரு மணி நேரமாக காத்திருந்த 50-க்கும் மேற்பட்ட தினக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் திடீரென இலவச பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பஸ்கள் நிற்காமல் சென்றதால் இன்றைக்கு பணிக்கு செல்ல முடியவில்லை .ஒரு நாள் வருமானம் போய்விட்டது. இதுபோல் தொடர்ந்து கடந்த3 நாட்களாக பேருந்து முருகன்குடியில் நிற்காமல் செல்கிறது என்றனர். இந்த போராட்டம் 1மணி நேரமாக நீடித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படட்டது.

    தகவல்அறிந்த போலீசார் விரைந்து சென்று பெண்களை சமாதானம் செய்தனர். ஆனால் இந்த சமரசத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டம் செய்தனர்.

    • கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அந்த முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது.
    • நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்

    கடலூர்:

    கடலூர் அருகே சுப்ரமணியபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றியது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது. கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை துணை மேயர் தாமரைச்செல்வன் குறிஞ்சிப்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது வக்கீல்கள் திருமார்பன், திருஞானமூர்த்தி, குணசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது
    • அக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம்பழைய காலனி சேர்ந்தவர் அய்யப்பன் (52)கூலி தொழிலாளி இவரது கூரை வீடு நேற்றுநள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டி நிலைய தீயணைப்புநிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள்விரைந்து சென்றுஅக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புலிகாரம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் காட்டுக் கொட்டகை வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்கு நேற்று இரவு 8 மணி அளவில் ராமநத்தம் சென்றார். இரவு 9.45 மணிக்கு வீடு திரும்பினார். அப்ேபாது இவரது காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதில் காட்டு கொட்டகை வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மேலும் விளை நிலத்திற்கு தீ பரவாமல் அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காட்டுக்கொட்டைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் காட்டுக் கொட்டகை வீடு தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். விழா முடிந்ததும் ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர்.,
    • வாக்குவாதம் வந்தது. இதில் இருவர் மற்ற இருவரை தடியால் அடித்த தாக்கினர்,


    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆண்டிமடம் பூக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 26). இவரது சகோதரர் சத்தியமூர்த்தி (24). இவர்கள் திருவிழாக்களில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இதேபோல விருத்தாசலம் புதாமூர் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் (30), இவரது சகோதரர் தினேஷ் (23). இவர்களும் அதே தொழில் செய்து வருகின்றனர்  திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். ஆற்றுத் திருவிழா முடிந்து ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர். தொழில் போட்டி காரணமாக இவர்களிடையே வாக்குவாதம் வந்தது. இதில் சதிஷ், தினேஷ் ஆகியோர் சரவணன், சத்தியமூர்த்தி ஆகியோரை தடியால் தாக்கினர். இதில் காயமடைந்த சத்தியமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்

    .  திருவெண்ணைநல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆற்றுத் திருவிழா முடிந்து சாமி விதியுலா நடந்தது. இதில் சுப்பிரமணியன் மகன் சந்தோஷ் சாமிக்கு தீபாராதனை காட்டினார். அப்போது அங்கு வந்த மோகன், மஞ்சு, மனோஜ், நாராயணன் ஆகியோர் சந்தோஷை ஆபாசமாக திட்டி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சந்தோஷ் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்  இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    வீட்டின் பின்புறம் கதவு உடைந்து இருந்தது. வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது

    கடலூர்:

    கடலூர் அருகே கோண்டூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புறம் கதவு உடைந்து இருந்தது. இதனை பார்த்து வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது   இதனை தொடர்ந்து வீட்டின் அருகாமையில் டீக்கடை ஒன்று உள்ளது. டீக்கடையில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 15 ஆயிரம் பணம் மற்றும் மிக்சியை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதன் அருகாமையில் மளிகை கடை ஒன்று உள்ளது. மளிகை கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் அங்கு இருந்த 10 ஆயிரம் ரொக்க பணம் திருடி சென்றனர். மேலும் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று இருந்தது.

    அந்த ஜெராக்ஸ் கடையின் ஒருபுறம் பூட்டை உடைத்து, மற்றொருபுறம் இருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்தபோது உடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மர்ம நபர்கள் அங்கு திருட முடியாமல் தப்பித்து ஓடினர். இந்த நிலையில் இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, பீதியில் காணப்பட்டனர்  இத் தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருடு நடந்த வீடு மற்றும் கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.     இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நள்ளிரவில் 3 கடைகள் மற்றும் வீட்டில் பணம் மற்றும் சைக்கிள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு கோண்டூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×