என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேசன் செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

    கடலூர்

    பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன் அன்றைய தினம் எனக்கு ஆபரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து எனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் சேர்க்கப்பட்டேன்.

    ஆனால் வலி நிற்காத காரணத்தினால் அக்டோபர் மாதம் 15 -ந் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டேன். இந்த நிலையில் தவறான ஆபரேசன் செய்ததாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தோம்.

    இதனை தொடர்ந்து 2 முறை அரசு மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் இதற்கு இதனால் வரை பதில் மனு வழங்கவில்லை. ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் அது சம்பந்தமாக விசாரணை நடத்தியது தொடர்பாக ஆவண கோப்புகளை உடனடியாக எடுத்து வந்து இதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

    • விருத்தாசலத்திற்கு தடம் எண் 22 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
    • பஸ் கோ.மங்கலம் கிராமம் வழியாக சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கிருந்து விருத்தாசலத்திற்கு தடம் எண் 22 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்சானது சேப்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு நல்லூர் வழியாக விருத்தாசலம் வந்தடையும். இக்கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பல்வேறு பணிகளுக்காக விருத்தாசலம் செல்லும் தனியார், அரசு ஊழியர்கள் இந்த டவுன் பஸ்சில் தான் செல்லவேண்டும்.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு இந்த பஸ் சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பஸ்சினை டிரைவர் சரவணன் (வயது 40) ஓட்டினார். பஸ்சில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் கோ.மங்கலம் கிராமம் வழியாக சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலை ஓரம் பாசன வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதனால் பஸ்சில் வந்த பயணிகள், மாணவ-மாணவிகள் உயிர் பிழைக்க கூச்சல் போட்டனர்.சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். இது குறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் மணி தலைமையிலான வீரர்கள் தலைகுப்புற கவிழந்த பஸ்சில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்லும் அளவிற்கு 108 ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் படுகாயமடைந்தவர்கள் ஏற்றிச் சென்றனர். இவர்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அப்போது அவ்வழியே வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது காரினை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், கூடுதல் ஆம்புலன்ஸ் வரவழைக்கவும், போக்குவரத்து சீர்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • சிதம்பரத்தில் வீட்டில் சுருண்டு விழுந்து பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடலூர்

    சிதம்பரம் அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடபாதி பகுதியை சேர்ந்த வர் இளங்கோவன். இவரது மகன் ஹரீஸ் ராகவேந்திரா (வயது 16). இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சிய டைந்தனர். உடனடியாக ஹரீஸ் ராகவேந்திராவை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஹரீஸ் ராக வேந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக ராஜாமுத்தையா மருத்து வகல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அண்ணா மலைநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், (பொ) சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • கணேசன். பஸ் நிறுத்த பகுதியில் நின்றார். அங்கு சின்னதுரை என்பவர் வந்தார்,
    • அவர், கணேசனை வழிமறித்து செல்போன் கேட்டு மிரட்டினார்

    கடலூர்;

    சிதம்பரம் முத்துமாணிக்கம் தெருவை சேர்ந்தவர் கணேசன். (வயது 26). இவர் கஞ்சி தொட்டிமுனை பஸ் நிறுத்த பகுதியில் நின்றார். அப்போது அங்கு சின்னதுரை என்பவர் வந்தார். அவர் கணேசனை வழிமறித்து செல்போன் கேட்டு மிரட்டினார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் சின்னதுரையை சிதம்பரம் டவுன் போலீசார் கைதுெசய்தனர். 

    • பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்பட்டு ௬ பேர் கைது செய்யப்பட்டனர்

    கடலூர்:

    பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது. இது தொடர்பாக போலீசாரால் தினமும் யாரேனும் ஒருவர் கைது செய்யப்பட்டு சாராயம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பண்ருட்டி மேல்கவரப்பட்டில் கள்ள சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்தகோரி பெண்கள் உள்பட ஏராள மானோர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று திரண்டனர். 

    சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் யாரேனும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என சாராய வியாபாரிகள் மிரட்டல் விடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்படு கிறது என்று பொது மக்களிடம் கூறினார். இந்த புகார் மீதும் உடனடி யாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • மாலை வீடுதிரும்பியபோதுராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
    • பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் சென்றார். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை பாலூர் வழியாக வீடு திரும்பினார். அப்போது டி.ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43). கூலி தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன், சிவராஜ் உட்பட 4 பேர் பொட்டகுளம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சிவகுமாருக்கும், மணிவண்ணன் தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் மணிவண்ணன், சிவராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிவண்ணன், சிவராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    • கடலூர் அருகே மனைவி திட்டியதால் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). விவசாயக் கூலி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் மீண்டும் சண்டை வந்ததால் கோபமடைந்த சீனுவாசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கிய நிலையில் அவரது வீட்டின் அருகே கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீரில் பொம்மை மிதந்து செல்வதாக நினைத்து அதன் அருகே சென்று பார்த்தனர்.
    • பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததை கண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அங்குள்ள சிறுவர்கள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் பொம்மை மிதந்து செல்வதாக நினைத்து அதன் அருகே சென்று பார்த்தனர். ஆனால் அது பொம்மையல்ல குழந்தை என்பதை கண்டனர். அருகிலிருந்தவர்களிடம் சிறுவர்கள் தகவல் கூறினர். அங்கு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வந்து பார்த்த பொழுது பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததை கண்டனர். உடனடியாக திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்டு கரைபகுதியில் வைத்தனர் பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தண்ணீரில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்து வீசப்பட்டிருக்கலாம் என்பதும், கோழியூர் பகுதியை சேர்ந்த குழந்தை இல்லை என்பதும் தெரியவந்தது. வேறு யாரேனும் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வீசி சென்று இருக்கிறார்களா என போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே அம்மன் கோவிலில் தாலி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூர் காலனியில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12-ந் தேதி மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிசென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.நேற்று இரவு விசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர்.இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் 2 பேரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    உடனே 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்க ப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் திருடியதை ஒப்புக்கொண்டனர். உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் அய்யனார் (வயது 35), அங்கப்பன் (25) என்றும் 2 பேரும் விசூர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து அம்மன் தாலி, குத்து விளக்கு பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார்.
    • அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கீழே கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அர்ச்சகர் பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் பார்த்த போது பொருட்கள் மற்றும் சாமி சிலைகள் இருக்கும் அறையின் பூட்டையும் உடைக்க முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் , ஏதேனும் சாமி சிலை மற்றும் பொருட்கள் திருடு சென்று உள்ளதா? என்பதை பார்வை யிட்டனர் அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.

    இந்த நிலையில் கோவிலில் 3-வது முறையாக மர்ம நபர்கள் திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் சிலையில் அணிந்திருந்த வெள்ளி பூணூலை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த முறை மீண்டும் பூட்டை உடைத்து திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×