பண்ருட்டியில் துணிகரம்: போட்ேடாகிராபர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

பண்ருட்டியில் துணிகரம்: போட்ேடாகிராபர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.இவர் தனது குழந்தை பிறந்தநாளை யொட்டி சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம்.
கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அப்பாலு பத்தர் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். போட்ேடா கிராபராக உள்ளார். இவர் தனது குழந்தை பிறந்தநாளை யொட்டி சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.

இந்த சந்தர்ப் பத்தை பயன் படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

வீட்டுக்கதவு திறந்து கிடப்பது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் செல்ேபான் மூலாம் ராஜராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பண்ருட்டிக்கு விரைந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து ராஜாராம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார் போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் வழக்குபதிந்து கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்றனர்.

கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வந்தது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com