பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

மாலை வீடுதிரும்பியபோதுராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
Published on

கடலூர்:

பண்ருட்டியை அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் சென்றார். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை பாலூர் வழியாக வீடு திரும்பினார். அப்போது டி.ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com