என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.
    • பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி முதல் பனிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லுாரி வரையில் பைபாஸ் பகுதியில் வராததால்அப்பகுதிக்கு தனியாக தேசிய நெடுஞ்சாலை நகாய் பிரிவின் சார்பில் தனியாக ஒப்பந்த பணி கோரப்பட்டு பணிகள் துவங்கியது. இப்பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலைகள் தரமில்லாமலும், ஒரே நீள,அகலத்தில் போட ப்படவில்லை. மாறாக பள்ளமும், மேடுமாகவும், பழைய தார்சாலை அளவில் பாதியளவே பல இடங்களில் தார் சாலைபோடப்பட்டுள்ளன.

    அரைகுறையாக போடப்பட்ட தார்சாலையும் தரமற்ற முறையில் உள்ளது. இதனால் பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது. தரமற்ற சாலைகள் போட்ட தேசிய நெடு ஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சி யினர், வியாபாரிகள் போரா ட்டம் நடத்திட தயாராகி வருகின்றனர். இதனால் தரமற்ற சாலையை சீரமைத்து, சீராக சாலை அமைத்திட மாவட்ட நிர்வாகம், நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்.
    • இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல்,சரண்யா, புஷ்பராஜ், பயிற்சிசப்.இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பண்ருட்டி அம்பேத்கர் நகரில் பாலாஜி (வயது24) கஞ்சாவிற்பனையில்ஈடுபட்டதுதெரியவந்தது இதனை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

    • வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான 47.50 அடியை இன்று காலை எட்டியது.
    • வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 1.46 டி.எம்.சி. நீரினை தேக்கி வைக்கமுடியும். இந்த ஏரியின் முழுக் கொள்ளளவு 47.5 அடியாகும். இந்த ஏரி சென்னையின் முக்கிய ஆதாராமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர் வரும். கடந்த ஆண்டில் மழை பெய்யாத மாதமே இல்லை. இதனால் வீராணம் ஏரிக்கு நீர் வந்து கொண்டே இருந்தது. இதனால் வீராணம் ஏரி கடந்த ஆண்டு மட்டும் 6 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து சென்னையில் தடையின்றி குடிநீர் விநியோகம் நடந்தது.

    மேலும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரினால் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நெல் உட்பட பயிர்களின் விளைச்சல் அமோகமாக இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியான பணிகள் கிடைத்தது. காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தற்போது அறுவடை முடிந்த நிலையிலும், வடவாறு வழியாக ஏரிக்கு நீர் வந்து கொண்டே உள்ளது.

    இந்நிலையில் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான (1.46 டி.எம்.சி.) 47.50 அடியை இன்று காலை எட்டியது. இதனால் வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர். இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சென்னை நகருக்கும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    • சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை சென்றது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் விசாரிக்கிறார்.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை சென்றது. இந்த பஸ் பண்ருட்டி அருகே பணிக்கண்குப்பம் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் அந்த பகுதியில் உள்ள கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராமதாஸ், ஆறுமுகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் விசாரிக்கிறார். 

    • மகேந்திரனுக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது.
    • பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் மகேந்திரன் (வயது 57) சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்தார். இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வழக்கம் போல சிதம்பரம் மேல ரதவீதி, கீழ ரத வீதிகளில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக போலீஸ் நிலையம் திரும்பினார். அங்கிருந்த காவலர்களிடம் சம்பவத்தை கூறும் பொழுதே மயங்கிய நிலையில் போலீஸ் நிலையத்தில் உள்ள பெஞ்சில் சாய்ந்து விட்டார்.

    பணியில் இருந்த போலீசார் அவரை சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். பணியில் இருக்கும் போதே இறந்து போன சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு ஒரு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ், உதவி சுப்பிரண்டு ரகுபதி, சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் உட்கோட்ட போலீசார்கள் உயிரிழந்த மகேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    • லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது.
    • இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் வேல்முருகன்(வயது 20) மாட்டு வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.  இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி ெரயில்வே மேம்பாலத்தின் மேல் வரும்போது அதிகாலை சுமார் 4 மணி அளவில் நாமக்கல் பகுதியில் இருந்து பாய்லர் கோழி ஏற்றி விருத்தாசலம் நோக்கி வந்த லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாட்டின் கொம்பு உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த வேல்முருகன் மற்றும் அவரது தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.    இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய கோழி ஏற்றி வந்த லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நறுமணம் பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    • அபிநாத் (வயது 3). வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தவரை கடந்த 23-ந் தேதி முதல் காணவில்லை.
    • காணாமல் போன சிறுவன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் இறந்த நிலையில் மிதந்தார்.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே யுள்ள நாச்சியா ர்பேட்டை யைச் சேர்ந்தவர் அருட்செ ல்வன். இவரது மகன் அபிநாத் (வயது 3). வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தவரை கடந்த 23-ந் தேதி முதல் காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள், அபிநா த்துடன் விளையாடிய மற்ற சிறுவர்களிடம் விசாரித்தும் அபிநாத் கிடைக்கவில்லை. இதை யடுத்து அருட்செ ல்வனின் புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் சிறுவனின் வீட்டருகே நேற்று மாலை முதல் துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்த போது காணாமல் போன சிறுவன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் இறந்த நிலையில் மிதந்தார். இத்தகவல் ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தெரிவி க்கப்பட்டது. தகவலின் பேரில் தீய ணைப்பு துறையினருடன் வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்    வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது சிறுவன் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்தவுடன் இறந்த நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டதால் இந்த சிறுவன் தவறி விழுந்து இறந்தானா? அல்லது யாரோனும் சிறுவனை கொலை செய்து விட்டனரா? என்பது குறித்து போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • எங்கு ,தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை.போலீசில் அவர் கணவர் புகார் செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வடுக பாளை யத்தை சேர்ந்தவர் பொன்ன ம்பலம். அவரது மணைவி வள்ளி (வயது 32). அவரது மகன் பிரதீப் (5)  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை

    . அதிர்ச்சி யடைந்த பொன்னம்பலம் தனது மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்க ளில் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை.  இதுகுறித்து பண்ரு ட்டி போலீசில் பொன்ன ம்பலம் புகார் செய்தார். புகார் மனுவில் வடுகபாளை யத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஆசைவார்த்தை கூறி தனது மனைவியை கடத்தி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிந்து வள்ளி மற்றும் குழந்தையை தேடி வருகிறார்கள்.

    • ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பண்ருட்டி தபால் நிலையம் முன்புமாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது
    • மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்அனைவரையும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கைது செய்தார்,

    கடலூர்:

    மத்தியஅரசை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 44 சட்டங்கள், 4 ஆக சுருக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பண்ருட்டி தபால் நிலையம் முன்புமாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்அனைவரையும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கைது செய்து பண்ருட்டி திருமண மண்டபத்தில்தங்க வைத்துள்ளனர்

    • தரையில் அமர்ந்து வியாபாரம் செய்பவர்களுக்குள்ளே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் ,
    • அலுவலர் இதற்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.,

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்பு லியூரில் உழவர் சந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தற்போது வழக்கத்தை விட அதிக விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறி, பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வருகின்ற னர்  இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு சாலை ஓரங்களில் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் விற்பனை செய்து வந்த வியாபாரிகள் உழவர் சந்தையில் சிமெண்ட் தரை அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை தரையில் அமர்ந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

    இதன் மூலம் தற்போது உழவர் சந்தை வெளியில் சாலை ஓரங்களில் வியாபாரிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உழவர் சந்தையில் வாரந்தோறும் விவசாயிகள் குலுக்கல் முறையில் அவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு அதிகாரியின் அனுமதி அளித்து வந்தனர். இதில் மூன்று பழ வியாபாரிகளுக்கு நிரந்தரமாக மூன்று கடைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் வியாபாரம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்யாமல், வெளியில் தரையில் அமர்ந்து பழங்களை வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஏற்கனவே தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் நபர்களுக்கும், அவர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது இது சம்பந்தமாக வேளாண் அலுவலர் மகா தேவனிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக வேளாண் அலுவலர் மகாதேவன் பழ வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் அதற்கு உடன்பாடு ஏற்படவில்லை.  இதனை தொடர்ந்து இன்று காலை திருப்பாதிரிப்புலியூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேளாண் அலுவலர் மகாதேவன் முன்னிலையில் 3 பழ வியாபாரிகளிடம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் அமர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது இரண்டு பழ வியாபாரிகள் போலீசார் கூறியது போல் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.

    ஆனால் ஒரு பழ வியாபாரி, போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேளாண் அலுவலர் மகாதேவன் இது சம்பந்தமாக தங்கள் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் நபர்களுக்கும், அவர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் இதற்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • சந்திரசேகர் என்பவரது மனைவி மாணிக்கவல்லி (வயது42) இவர்வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதி இல்லாமல்விற்பனையில்ஈடுபட்டார்,
    • அவரை கைது செய்துஅவரிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி  சரகம் ஒதியடிகுப்பம் வடக்குத் தெரு, சந்திரசேகர் என்பவரது மனைவி மாணிக்கவல்லி (வயது42)

    இவர்வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதி இல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அவரை கைது செய்துஅவரிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புவனகிரி விருத்தாசலம் சாலையில் விருந்தினர்மாளிகையில் இருந்து வெள்ளாற்று பாலம் வரை சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகனஓட்டிகள் புகார்,
    • விபத்துக்கள் நடக்கிறதுஎன்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர்

    கடலூர்:

    புவனகிரி விருத்தாச்ச லம் சாலையில் விருந்தி னர்மாளிகையில் இருந்து வெள்ளாற்று பாலம் வரை சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்பட்டு கனரக வாகனங்கள் இயக்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது  கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே இடத்தில் 2 விபத்துக்கள் நடைபெற்று இருவரும் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர்.

    இதற்குகாரணம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமி ப்புகளை அகற்றாமல் பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து இருப்பதையும் சரி செய்யாமலும் இரு ப்பதால்தான் இது போன்ற விபத்துக்கள் நடக்கிறதுஎன்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர் ஆகையால் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவலாகவும் தொ லைபேசி வாயிலாகவும் கடிதம் மூலமும் தெரிவித்தி ருப்பது தெரிய வந்தது. ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் இதனை ஆய்வு மேற்கொண்டு இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    ×