பண்ருட்டியில் பரபரப்பு 5 வயது மகனுடன் இளம்பெண் கடத்தல்

2 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு ,தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை.போலீசில் அவர் கணவர் புகார் செய்தார்.
பண்ருட்டியில் பரபரப்பு  5 வயது மகனுடன் இளம்பெண் கடத்தல்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வடுக பாளை யத்தை சேர்ந்தவர் பொன்ன ம்பலம். அவரது மணைவி வள்ளி (வயது 32). அவரது மகன் பிரதீப் (5)  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை

. அதிர்ச்சி யடைந்த பொன்னம்பலம் தனது மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்க ளில் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை.  இதுகுறித்து பண்ரு ட்டி போலீசில் பொன்ன ம்பலம் புகார் செய்தார். புகார் மனுவில் வடுகபாளை யத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஆசைவார்த்தை கூறி தனது மனைவியை கடத்தி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிந்து வள்ளி மற்றும் குழந்தையை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com