என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஸ்ரீமுஷ்ணம் அருகேகாணாமல் போன சிறுவன் இறந்தது எப்படி?போலீசார் தீவிர விசாரணை
  X

  சிறுவன் அபிநாத்

  ஸ்ரீமுஷ்ணம் அருகேகாணாமல் போன சிறுவன் இறந்தது எப்படி?போலீசார் தீவிர விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அபிநாத் (வயது 3). வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தவரை கடந்த 23-ந் தேதி முதல் காணவில்லை.
  • காணாமல் போன சிறுவன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் இறந்த நிலையில் மிதந்தார்.

  கடலூர்:

  ஸ்ரீமுஷ்ணம் அருகே யுள்ள நாச்சியா ர்பேட்டை யைச் சேர்ந்தவர் அருட்செ ல்வன். இவரது மகன் அபிநாத் (வயது 3). வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தவரை கடந்த 23-ந் தேதி முதல் காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள், அபிநா த்துடன் விளையாடிய மற்ற சிறுவர்களிடம் விசாரித்தும் அபிநாத் கிடைக்கவில்லை. இதை யடுத்து அருட்செ ல்வனின் புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர்.

  இந்நிலையில் சிறுவனின் வீட்டருகே நேற்று மாலை முதல் துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்த போது காணாமல் போன சிறுவன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் இறந்த நிலையில் மிதந்தார். இத்தகவல் ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தெரிவி க்கப்பட்டது. தகவலின் பேரில் தீய ணைப்பு துறையினருடன் வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது சிறுவன் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்தவுடன் இறந்த நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டதால் இந்த சிறுவன் தவறி விழுந்து இறந்தானா? அல்லது யாரோனும் சிறுவனை கொலை செய்து விட்டனரா? என்பது குறித்து போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×