என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உளுந்தூர்பேட்டை அருகே மான் வேட்டையில் மயிலை கொன்ற வாலிபர் கைது
  X

  உளுந்தூர்பேட்டை அருகே மான் வேட்டையில் மயிலை கொன்ற வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசா யிகள் சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது நாட்டுத் துப்பாக்கிகளால் வயல்வெளிக்கு வரும் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர்
  • ஒருவர் துப்பாக்கியால் வேட்டையாடினார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்

  கடலூர்:

  உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் காப்பு க்காடு பகுதியை சுற்றி ஏராளமான விவசாய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் விளையக் கூடிய பயிர்களை பாதுகா ப்பதற்காக விவசா யிகள் சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது நாட்டுத் துப்பாக்கிகளால் வயல்வெளிக்கு வரும் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர் இதனை தடுப்பதற்காக டி.எஸ்.பி மகேஷ், எலவனாசூர்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் திரு மால் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் காலை குஞ்சரம் காப்புக்காடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

  அப்போது குஞ்சரம் காப்புக்காடு அருகே ஒரு வயல்வெளியில் துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர் இந்நிலையில் அங்கு வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 2 மயில்களை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் வேட்டையாடினார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எறையூர் பாளையத்தை சேர்ந்த பவுல் அமல்ராஜ் (வயது 21) என்பது தெரிய வந்தது. மேலும் மான் வேட்டைக்கு சென்ற அமல்ராஜ் மயிலை வேட்டையாடியதும் விசா ரணையில் தெரியவந்தது. உடனே பவுல் அமல்ராஜை கைது செய்து போலீசார் அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் வேட்டையாட சென்ற மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×