தடையை மீறி விசிக கொடி ஏற்றிய கடலூர் மாநகராட்சி துணை மேயருக்கு நிபந்தனை ஜாமீன்

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது. நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்
குறிஞ்சிப்பாடி நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆஜரானார்.
குறிஞ்சிப்பாடி நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆஜரானார்.
Published on

கடலூர்:

கடலூர் அருகே சுப்ரமணியபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றியது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது. கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை துணை மேயர் தாமரைச்செல்வன் குறிஞ்சிப்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது வக்கீல்கள் திருமார்பன், திருஞானமூர்த்தி, குணசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com