என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயில் எரிந்த வீட்டினை படத்தில் காணலாம்.
பண்ருட்டி அருகே தீவிபத்து: தொழிலாளி வீடு எரிந்து நாசம்
- நள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது
- அக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம்பழைய காலனி சேர்ந்தவர் அய்யப்பன் (52)கூலி தொழிலாளி இவரது கூரை வீடு நேற்றுநள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டி நிலைய தீயணைப்புநிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள்விரைந்து சென்றுஅக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story






