என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே பஸ்களை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல்
- விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற பெண்களுக்கான இலவச பஸ்சில் சென்றனர்.
- தினக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் திடீரென இலவச பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே முருகன் குடி கிராமத்தில் நாள் தோறும் தினக்கூலிவேலைக்காக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திட்டக்குடி பகுதிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற பெண்களுக்கான இலவச பஸ்சில் சென்றனர்.
ஆனால் இந்த பஸ் முருகன்குடியில் நிற்காமல் சென்றது. தொடர்ந்து வந்த 3-வது பஸ்களும் முருகன்குடி கிராமத்தில் நிற்காமல் சென்றது. இதனால் கடந்த ஒரு மணி நேரமாக காத்திருந்த 50-க்கும் மேற்பட்ட தினக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் திடீரென இலவச பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பஸ்கள் நிற்காமல் சென்றதால் இன்றைக்கு பணிக்கு செல்ல முடியவில்லை .ஒரு நாள் வருமானம் போய்விட்டது. இதுபோல் தொடர்ந்து கடந்த3 நாட்களாக பேருந்து முருகன்குடியில் நிற்காமல் செல்கிறது என்றனர். இந்த போராட்டம் 1மணி நேரமாக நீடித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படட்டது.
தகவல்அறிந்த போலீசார் விரைந்து சென்று பெண்களை சமாதானம் செய்தனர். ஆனால் இந்த சமரசத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டம் செய்தனர்.






