கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு
Published on

கடலூர்:

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அந்த முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com