பண்ருட்டி அருகே அம்மன் கோவிலில் தாலி திருடிய 2 பேர் கைது

பண்ருட்டி அருகே அம்மன் கோவிலில் தாலி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கைதான 2 பேரை படத்தில் காணலாம்.
கைதான 2 பேரை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூர் காலனியில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12-ந் தேதி மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிசென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.நேற்று இரவு விசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர்.இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் 2 பேரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

உடனே 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்க ப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் திருடியதை ஒப்புக்கொண்டனர். உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் அய்யனார் (வயது 35), அங்கப்பன் (25) என்றும் 2 பேரும் விசூர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து அம்மன் தாலி, குத்து விளக்கு பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com