கடலூர் அருகே மனைவி திட்டியதால் விஷம் குடித்து கணவன் தற்கொலை

கடலூர் அருகே மனைவி திட்டியதால் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே மனைவி திட்டியதால் விஷம் குடித்து கணவன் தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). விவசாயக் கூலி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் மீண்டும் சண்டை வந்ததால் கோபமடைந்த சீனுவாசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கிய நிலையில் அவரது வீட்டின் அருகே கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com