என் மலர்
கடலூர்
- மணிகண்டன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
- மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் பில்லாலி தொட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவருக்கு நித்யா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் இன்று காலை தனது வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற போராட்டம் நடத்தினர்.
- பா.மக.வினர் காட்டுமன்னார்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாபால் நிலையம் வந்தடைந்தனர்.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் ஒன்றிய, நகர பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவேற்றக் கோரி தமிழக முதல்-அமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தலைவருக்கும் தபால் மூலம் 20 ஆயிரம் மனு அனுப்பும் போராட்டம் காட்டு மன்னார்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் நகர செயலாளர்டாக்டர் அன்பு சோழன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னாதாக பா.மக.வினர் காட்டுமன்னார்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாபால் நிலையம் வந்தடைந்தனர். அதன் பின்னர் தபால் நிலைய அதிகாரிகளிடம்சுமார் 20 ஆயிரம் மனுக்களை மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் முன்னிலையில் தபால் தலை ஒட்டிகொடுத்தனர்.
- ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது.
- இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் ராமநத்தம் சுற்றி உள்ள பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, டாஸ்மார்க் அருகே ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு திட்டக்குடி அருகே அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் (28), ராஜவேணி (32), பரிமளா (36) ஆகிய 3 பேரும் ஸ்கூட்டியில் ராமநத்தத்தில் இருந்து அரங்கூர் சென்ற போது திட்டக்குடி ராம நத்தம் நெடுஞ்சா லையில் உள்ள பெரங்கியம் அரங்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத, 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சிம்ரன் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்தனர்.
ஆனால் திருட முடியவி ல்லை இந்த வழிப்பறியில் ஸ்கூட்டியில் வந்த 3 பெண்களும் கீழே விழு ந்ததில், ராஜவேணி படுகா யம் அடைந்தார். மற்ற 2 பெண்கள் சிறு காயமும் ஏற்பட்டு ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராஜவேணி மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு வாரத்தில் மட்டும் திட்டக்குடி மற்றும் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாக ஸ்கூட்டியில் செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறையினர் விரைந்து இந்த வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டுபுதிய புலன்விசாரணை பயிற்சி மையத்தை திறந்துவைத்தார்.
- புலன் விசாரண பயிற்சிமையம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீசாருக்கான புலன் விசாரணை பயிற்சி மையம்பண்ருட்டியில்அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்தலைமையில் நடந்தது. பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா வரவேற்று பேசினார்.பண்ருட்டி- கும்பகோணம் சாலை யில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில்நடந்ததிறப்புவிழாவில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டுபுதிய புலன்விசாரணை பயிற்சி மையத்தை திறந்துவைத்துபேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :- இந்த புலன் விசாரண பயிற்சிமையம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.இதுபோன்ற பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் போலீசார் புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட முடியும். இந்த பயிற்சிகளின் மூலம் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும்.சமீபத்தில் காடாம்புலியூரில் நடந்த கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து 36 மணி நேரத்தில் முறையான ஆவண ங்களுடன் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல்செய்து போலீசாருக்கு பெருமை சேர்த்த பண்ருட்டிபோலீசாரைபாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரை பாண்டி யன்,நந்தகுமார், சீனிவாசன், பரமேஸ்வரபத்மநாபன், பண்ருட்டி வர்த்தக சங்க பிரமுகர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சிவக்குமார் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே துணிஞ்சி ரமேடு பெரியார்தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (50). இவர் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் இரும்பு மேஜையின் டிராவை உடைத்து உள்ளே இருந்த ரூ.37,490 ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவக்குமார் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- டிராக்டரில் செல்லும் போது வயல்வெளியில் டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி வரதராஜன் கீழே விழுந்தான்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திட்டக்குடி:
அரியலூர் மாவட்டம் டி. கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் . இவருக்கும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வரதராஜன் (10) என்ற ஒரு மகன்இருந்தான். பழனிவேல் கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
ரேகா தனது மகனுடன் தனது தாய் வீடான கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் வசித்து வந்த வருகிறார். ரேகாவின் தம்பி மணிகண்டன் தாட்கோவில் கடன் பெற்று புதிய டிராக்டர் வாங்கியுள்ளார்.
இந்த டாக்டரை மணிகண்டனின் உறவினர், அரியலூர் மாவட்டம் குழுமூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்தான். இவன் சிறுவன் வரதராஜனை ஏற்றிக் கொண்டு விவசாய பணிக்காக டிராக்டரில் செல்லும் போது வயல்வெளியில் டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி வரதராஜன் கீழே விழுந்தான்.
டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . நேற்று திட்டக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக வரதராஜனை சேர்த்துள்ளனர் .மேலும் அவன் வீட்டுக்கு ஒரே ஆண் குழந்தை ஆவான். அவன் உயிர் இழந்த சம்பவம் பெற்றோர் மட்டுமின்றி அப்பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வரவேற்றார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக அரங்கில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்தந்த நபர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் கடலூர் மாவட்டத்தில் முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை பிடித்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். இதில் போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் டி.ஜி.பி சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் போலீசாரின் புலன் விசாரணை சிறப்பாக உள்ளது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முத்தாண்டிக்குப்பம் கொலை வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து 48 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது பாராட்டுக்குரியதாகும். மேலும் போலீசார் புலன் விசாரணையில் அறிவியல் ரீதியாக பல்வேறு சாதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மேலும் தமிழகத்தில் பெரிய அளவிலான கலவரம், வட மாநிலத்தவர்கள் கொள்ளையில் ஈடுபடுவது மற்றும் சீரியல் தொடர் கொள்ளை போன்றவற்றை நடைபெறாமல் பாதுகாத்து வருகின்றோம். சிதம்பரம் சிறுமி திருமண வழக்கு மற்றும் விசாரணை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதன் செயலாளர் பதில் அளிப்பார்கள். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10,000 போலீசார் புதியதாக நியமித்த நிலையில் தற்போது 3,200 போலீசார் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு கட்டத்தில் போலீசார் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழக எல்லைகளில் உள்ள சோதனை சாவடியில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 16 சோதனை சாவடியில் போலீசார் மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றத்தில் எதிர்பாராத குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகின்றது. இதில் அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தொழிலதிபர்கள் வேலை தேடி அலையும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் அதற்காக போலீசார் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 37 மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் குற்றப்பிரிவு மையங்கள் ஏடிஜிபி தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் வெளிநாடுகளில் ஏமாற்றப்படும் பணங்கள் உடனடியாக பறிமுதல் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 26,000 சிம் கார்டுகள் மற்றும் 1700 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய குற்றவாளிகளை பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான குற்றங்கள் கண்டுபிடித்து ரூ.32 லட்சம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது காவல் உதவி என்ற செயலி மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு, அவசர உதவி போன்றவற்றில் போலீசார் உடனுக்குடன் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த செயலி மூலம் 66 விதமான உதவிகள் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் ஒரு நாள் போலீசாருக்கு ஓய்வு கிடைக்க வேண்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிறப்பான திட்டத்தை வடிவமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதன் மூலம் அனைத்து போலீசாருக்கும் வாரம் ஒரு முறை விடுமுறை கிடைப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும் சில நேரங்களில் ஒரு நாள் விடுமுறை அளிப்பதற்கு சிரமம் ஏற்பட்டு வருகின்றது. எனவே தமிழ்நாடு போலீசார் சிறப்பாக பணிபுரிந்து சட்ட ஒழுங்கு சிறப்பான நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- கடலூர் முதுநகரில் கல்லூரி மாணவி மாயமானார்.
- பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்த கல்லூரியில்3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
- காராமணிக்குப்பம் குளக்கரை குப்பத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது.
- விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் அடுத்த காராமணிக் குப்பம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
கடலூர் - பண்ருட்டி மெயின் ரோட்டில் காராமணிக்குப்பம் குளக்கரை குப்பத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை கடந்த 2002 -ம் ஆண்டு புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற்று பராமரித்து வந்தனர். தற்போது கடலூர் - மடப்பட்டு சாலை விரிவாக்க பணியின் போது கோவிலை இடித்து விட்டு அதனை கட்டித் தருவதாக தெரிவித்தனர். ஆனால் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களிடம்இருந்து பணம் வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர். ஆனால் இது நாள் வரை கோவில் கட்டுவதற்கு பணம் வழங்கவில்லை. இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- ராம்குமார் பால்கடை வைத்து நடத்தி வருகிறார்.
- மர்ம கும்பல் ராம்குமாரை சரமாரியாக தாக்கினர்.
கடலூர்:
விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராம்கு மார் (வயது 22) இவர் அதே பகுதியில் பால்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த கடைக்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தனர். அவர்கள் ராம்குமாரை சரமாரியாக தாக்கி அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியா வெட்டினர். இதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தா சலம் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த ராம்குமாரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்கடை நடத்தி வரும் ராம்குமாரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன அந்த கும்பலுக்கும் ராம்குமா ருக்கும் முன்விரோத தகராறு இருந்துள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
- காலையிலிருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வந்தனர்.
- ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலையிலிருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சுருக்கு வலை மீன்பிடி தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -
கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி அளிக்க வேண்டி மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை அதிகாரிகள், முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த விதமான தீர்வும் ஏற்படவில்லை. ஆகையால் எங்களுடைய வல்லம் மற்றும் விசைப்படகுகளை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீன்பிடி தடைக்காலம் முடிந்து தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கி ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் 8 - ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
- அதிகபட்ச மானியத்தொகை ரூ.2.5 லட்சம் வரை வழங்கப் படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட விழை வோரை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டு மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெறுவதற்கு, மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தேவை யான தகுதிகள் குறித்த விரிவான விவரம் பின்வருமாறு:-
பொதுப் பிரிவினர் - 18 வயது முதல் 45 வயது வரை, சிறப்புப் பிரிவினர் - 18 வயது முதல் 55 வயது வரை சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் கல்வித் தகுதி 8 - ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். சேவை மற்றும் வணிகம் துறை சார்ந்த தொழில் களுக்கு குறைந்தபட்சம் - 5 லட்சம், உற்பத்தித் துறைக்கு அதிகபட்சம் - ரூ.15 லட்சமும், வேலைவாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும். 01. 01. 2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டி லிருந்து தமிழகம் திரும்பிய வராக இருத்தல் வேண்டும். கடவுச் சீட்டு வழி முறை, விசா நகல் , கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைத்து வழங்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியமாக (அதிகபட்ச மானியத்தொகை ரூ.2.5 லட்சம் வரை) வழங்கப் படும். மானியத்தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்ட பின்னர் கடன் தொகையில் சரி கட்டப்படும். எனவே, கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலை யிழந்து தமிழகம் திரும்பிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






