search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  2023-ம் ஆண்டிற்கான சுதந்திர தின விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    கடலூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான சுதந்திர தின விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

    • சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    2023ஆம் ஆண்டிற்கான சுதந்திரதின விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மற்றும் மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவகர்கள் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இவ்விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையளதத்தில் 10.06.2023 வரை பதிவேற்றம் செய்யலாம். மேற்படி அரசாணையின்படி சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மொழி, இனம், பண்பாடு, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரியும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமூக சேவை தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×