

கடலூர்:
கடலூர் தானம் நகரை சேர்ந்தவர் ஜோதி. பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பசுமாடு, அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பசுமாட்டை கழிவுநீர் கால்வாய்க்குள் இருந்து மீட்க முயன்றார். ஆனால் பசுமாட்டை மீட்க முடியவில்லை. இது குறித்து கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.