search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர்  மாவட்டத்தில்   100 கோடி மதிப்பீட்டில்  768 கிலோமீட்டர் தூரம் தூர்வாரும் பணி: கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில்  ஆய்வு
    X

    கோப்பாடி கிராமத்தில் பழைய கொள்ளிடத்தில் தூர் வாரும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்ட காட்சி.

    கடலூர் மாவட்டத்தில் 100 கோடி மதிப்பீட்டில் 768 கிலோமீட்டர் தூரம் தூர்வாரும் பணி: கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு

    • கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
    • உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    நீர்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட் கலெக்டர் .அருண் தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 -ம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், 100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை கிராமத்தில் மீதிக்குடி வாய்கால் 21.21 கி.மீ நிளத்திற்கு 20.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வரும் பணியினையும், வேளக்குடி கிராமத்தில் கவரப்பட்டு வாய்க்கால் 9 கி.மீ நீளத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும், காட்டுமன்னார்கோயில் கோப்பாடி கிராமத்தில் பழைய கொள்ளிடம் 3.20 கி.மீ நீளத்திற்கு ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், கீழவன்னியூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் 2.50 கி.மீ நீளத்திற்கு ரூ.25லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடி பணிகள் முன்னேற்றம் குறித்தும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின்) வாயிலாக சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பகுதியில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.435 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணி முடிவுற்று அணுகு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×