என் மலர்
கோயம்புத்தூர்
- பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
- பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம், எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குநர் வடிவேல் விசாரணை நடத்தினார்.
மாணவியிடமும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
- பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது.
- தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.
மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.
காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
- பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியுள்ளது.
- காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு அருகே மாதவிலக்கை காரணம் காட்டி மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைரத்து தேர்வு எழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். மாணவி ஆண்டு தேர்வு எழுதுவதற்காக 7-ந்தேதி பள்ளிக்கு வந்தபோது வகுப்பறை கதவை பூட்டி வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாகவும் இதனை தொடர்ந்து நேற்று தேர்வெழுத சென்றபோதும் வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் மாணவியின் தாய் நேரில் சென்று கேட்டுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில் யாராவது தவறு செய்திருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
- தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு:
கோவை கிணத்துக்கடவு அருகே மாதவிலக்கை காரணம் காட்டி மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைரத்து தேர்வு எழுத சொல்லியதாக தனியார் பள்ளி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாணவியின் தாய், செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
இதனை தொடர்ந்து வகுப்பறையில் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறிவிட்டு, வகுப்பறைக்கு வெளியில் அமர வைக்கப்பட்டதாக தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- அங்க அடையாளங்களை வைத்து வெள்ளி வேல் திருடிய நபரை தேடி வந்தனர்.
- அவரிடம் இருந்த வெள்ளி வேலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடவள்ளி:
கோவை மருதமலை அடிவாரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வேல் கோட்டம் என்ற தனியார் தியான மடம் உள்ளது.
இங்கு வேல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு 2½ அடி உயரத்தில் வெள்ளி வேல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
தினமும் காலையில் இந்த மடத்தில் வேல் வழிபாடு நடப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி, மடத்தின் உரிமையாளர் வேல் வழிபாடு நடத்துவதற்காக மடத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேல் திருடு போயிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர், உடனே மடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதில், மொட்டையடித்த நிலையில் காவி உடையணிந்து சாமியார் ஒருவர் மடத்திற்குள் நுழைவதும், அங்கு இருந்த வெள்ளி வேலை எடுத்து, சட்டைக்குள் மறைத்து கொண்டு, மடத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
உடனடியாக மடத்தின் உரிமையாளர் சம்பவம் குறித்து வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து வந்த வேளையில், அடிவாரத்தில் உள்ள மடத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, வெள்ளி வேல் திருடிய நபரை பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி அதில் உள்ள அங்க அடையாளங்களை வைத்து வெள்ளி வேல் திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மருதமலை அடிவார பகுதியில் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சி.சி.டி.வியில் இருந்த அங்க அடையாளங்கள் படி சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஊர், ஊராக சென்று மடத்தில் தங்கும் சாமியாரான திண்டுக்கல் மாவட்டம் திருமலை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் சர்மா (வயது37) என்பது தெரியவந்தது.
இவர் தான் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேலை திருடி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த வெள்ளி வேலை பறிமுதல் செய்தனர். சாமியார் வெங்கடேஷ் சர்மா, வெள்ளி வேலை திருடியதும், அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அவர் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
பாலியல் புகாரில் சிக்கிய மதபோதகர் ஜான் ஜெபராஜ், எந்த பகுதியில் பதுங்கி உள்ளார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவர் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன் அந்த நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபர் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பிடிபட்டால் தகவல் தெரிவிக்க வேண்டிய போலீஸ் நிலைய எண், அதிகாரிகளின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனவே மதபோதகர் கண்டிப்பாக வெளிநாடு தப்பிச்செல்ல முடியாது. அத்துடன் அவரை விரைவில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போத்தனூருக்கு மறுநாள் காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது.
- ரெயில் மே மாதம் 2-ந்தேதிவரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது.
கோவை:
தென் இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் 06027 என்ற எண்ணுள்ள ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.
போத்தனூரில் இருந்து வருகிற 14-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் 06028 என்ற எண்ணுள்ள ரெயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தைசென்றடைகிறது.
தாம்பரத்தில் இருந்து 06185 என்ற எண்ணுள்ள ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பக்கோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக போத்தனூருக்கு மறுநாள் காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரெயில் மே மாதம் 2-ந்தேதிவரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது.
போத்தனூரில் இருந்து 06186 என்ற ரெயில் ஞாயிறுதோறும் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. வருகிற 13-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதிவரை இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை
- ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை:
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது37). இவரது சொந்த ஊர் நெல்லை. ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சபையின் மத போதகராக இருந்தார். ஜான் ஜெபராஜ் பாப் இசையின் மூலம் பாடல்களை பாடி இளைஞர்களை கவர்ந்து வந்தார்.
இவர் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநி லங்ளுக்கும் சென்று பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது 2 சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி அவரது வீட்டில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளும் பங்கேற்றுள்னர்.
அப்போது, ஜான் ஜெபராஜ் அந்த சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
மதபோதகர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அவரை கைது செய்வதற்காக ஜி.என்.மில்சில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் இல்லை.போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவான அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவான ஜான் ஜெபராஜ் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். பெங்களூர் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் நெல்லை என்பதால் அவர் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளது என்பதால் போலீசார் அங்கும் முகாமிட்டு, அவரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜ் பேசி முன்பு வெளியிட்ட ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அவர் தனது மனைவியிடம், என்ன நடந்தது என்று உனக்கும் தெரியும். உனக்கும், எனக்கும் இடையே உள்ள சிறிய பிரச்சினையை வைத்து, ஒருவர் நம்மிடம் விளையாண்டு விட்டார்.உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்கிறபோது எல்லா மனிதருக்கும் முதலில் தோன்றுவது தற்கொலை எண்ணம் தான்.
எனக்கும் அதுபோன்று தோன்றியது. நான் 4-5 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். 3 மாதம் மன அழுத்தத்தில் இருந்தேன். சாப்பிடவில்லை. 9 கிலோ வரை குறைந்து விட்டேன்.
நான் தவறு செய்து விட்டு, அது செய்தேன். இது செய்தேன் என கூறுகிறாய் என நினைக்கலாம். என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். நான் தவறு செய்திருந்தால், அதனை கடவுள் பார்த்துக்கொள்வார்.
இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.
இதேபோல மேலும் சில ஆடியோக்களையும் ஜான்ஜெபராஜ் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோ விவரங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- தனது வீட்டில் 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது.
- ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கிறிஸ்தவ சபையை சேர்ந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகார் தொடுக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் கேவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
- மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா அரங்கத்தில் வள்ளி கும்மபி நடனம் மூலம் கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற 16,000 பெண்களுக்கு வாழ்த்துகள். வள்ளிக்கும்மி விழாவில் 16,000 பெண்கள் பங்கேற்றது என்பது மிகப்பெரிய சாதனை.
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்.
2026 சட்டமன்ற தேர்தலி்ல திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மேற்கு மண்டல வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி உள்ளது.
தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.
தொகுதி மறுவரையறை மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்.
40க்கு 40 வெற்றி என்பது மக்கள் நமது திராவிட மாடல் ஆட்சிக்கு கொடுத்த அங்கீகாரம்.
நமக்கு நிதியை முறையாக வழங்கும் மத்திய அரசு இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை படைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டன.
- கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் சிறப்பு நீதிபதி முன்பு 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமார், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் கொடுத்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை நடந்துள்ளது. 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டன.
2 மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அரசு தரப்பு சாட்சியங்கள் முடிந்த நிலையில், இருதரப்பிடமும் கேள்விகள் கேட்டு பதில் பெறுவதற்காக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதற்காக குற்றம் சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமார், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேரும் சேலம் மத்திய ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் சிறப்பு நீதிபதி முன்பு 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
இதையடுத்து வழக்கு விசாரணையை 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- இரும்பு கம்பியை எடுத்து வந்து ரம்யாவை தாக்க முயன்றார்.
- 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை உருமாண்டம்பாளையம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை ரம்யா வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டிற்கு எரிவாயு சிலிண்டர் போடுவதற்காக ஆட்டோ ஒன்று வந்தது.
அப்போது அந்த சாலையில் ஆட்டோ வர முடியாதபடி இருசக்கர வாகனம் ஒன்று நின்றிருந்தது. குறுகலான சாலை என்பதால் 2 வாகனங்கள் வரமுடியாது. இதை பார்த்த அந்த பெண், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம், வாகனத்தை எடுத்து அருகே உள்ள வீட்டின் முன்பு சாக்கடை மேல் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் சிலாப்பில் நிறுத்துமாறு கூறியதாக தெரிகிறது.
இவர் கூறியதை அந்த வீட்டின் உரிமையாளரான செங்காளியப்பன் (வயது60), அவரது மகன் ராஜேஷ்(37), ஆகியோர் யாரை கேட்டு எங்களது வீட்டின் வாசலில் உள்ள சிலாப் மேல் வண்டியை நிறுத்த கூறினாய்? என ரம்யாவிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளாலும் வசைபாடினர்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜேஷ் இரும்பு கம்பியை எடுத்து வந்து ரம்யாவை தாக்க முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து, ரம்யாவை காப்பாற்றி அங்கிருந்து அனுப்பினர்.
அவர் அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு செங்காளியப்பனின் உறவினரான காப்பீடு ஏஜென்சி முகவரான சுந்தர்ராஜன்(50) வந்தார்.
அவர் இங்கு என்ன நடந்து என தெரியாமேலேயே வந்த வேகத்தில் ரம்யாவை தனது காலால் எட்டி உதைத்தார். மேலும் ரம்யாவின் கையை பிடித்து முறுக்கி, அவரை கீழே தள்ளி தாக்கினார்.
இதை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினர், எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் ஓடி சென்று தடுத்தார். ஆனாலும் அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். பெண்ணை தாக்கும் வீடியோவை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ரம்யா கூறியதாவது:-
செங்காளியப்பன் எப்போதும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் என்று கூட பாராமல் பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும் செங்காளியப்பனின் மகன் ராஜேஷ் என்னை அடிக்க இரும்பு ராடை எடுத்து வந்ததாகவும், சுந்தரராஜன் அடித்தபோது, அருகில் இருந்தவர்கள் என்னை காப்பாற்றினர். இல்லையென்றால் அவர்கள் என்னை கொன்று இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணை தாக்கிய சுந்தர்ராஜன், செங்காளியப்பன், அவரது மகன் ராஜேஷ் ஆகிய 3 பேர் மீதும் பொது இடத்தில் பெண்ணை மானபங்க படுத்துதல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண்ணை தாக்கிய சுந்தர்ராஜன் வெள்ளகிணர் பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார்.






