என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி- நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி
- பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியுள்ளது.
- காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு அருகே மாதவிலக்கை காரணம் காட்டி மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைரத்து தேர்வு எழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். மாணவி ஆண்டு தேர்வு எழுதுவதற்காக 7-ந்தேதி பள்ளிக்கு வந்தபோது வகுப்பறை கதவை பூட்டி வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாகவும் இதனை தொடர்ந்து நேற்று தேர்வெழுத சென்றபோதும் வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் மாணவியின் தாய் நேரில் சென்று கேட்டுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில் யாராவது தவறு செய்திருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






