என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் இருந்து சென்னைக்கு 2 சிறப்பு ரெயில்கள்- நாளை முதல் இயக்கப்படுகிறது
- போத்தனூருக்கு மறுநாள் காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது.
- ரெயில் மே மாதம் 2-ந்தேதிவரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது.
கோவை:
தென் இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் 06027 என்ற எண்ணுள்ள ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.
போத்தனூரில் இருந்து வருகிற 14-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் 06028 என்ற எண்ணுள்ள ரெயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தைசென்றடைகிறது.
தாம்பரத்தில் இருந்து 06185 என்ற எண்ணுள்ள ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பக்கோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக போத்தனூருக்கு மறுநாள் காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரெயில் மே மாதம் 2-ந்தேதிவரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது.
போத்தனூரில் இருந்து 06186 என்ற ரெயில் ஞாயிறுதோறும் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. வருகிற 13-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதிவரை இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






